பக்கம்:மக்கட் செல்வம்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

அடித்தா?.



அன்பின் அரசி!

குழந்தை வளர்ப்பைப் பற்றி எழுதி இருக்கின்ற அத்தனைப் புலவர்களும் பிள்ளைகளை அணைத்தே வளர்க்க வேண்டும் என்றுதான் குறிப்பிடுகிறார்கள். என்றாலும் உலக வழக்கில் பலர் அப்படி இருப்பதில்லை என்பதை நீயே நன்கு கண்டிருக்கிறாய். நாட்டிலே 'முருங்கையை ஒடித்து வள, பிள்ளையை அடித்து வளர்' என்ற ஒரு பழமொழியும் உலவுவதை நீ அறிவாய். ஆம்! பல பிள்ளைகள் அப்படி அச்சத்தாலேயே வளர்க்கப் பட வேண்டிய சூழ்நிலையில் தள்ளப்பட்டு விடுகிறர்கள். ஆனால் அந்த அடி என்னும் தண்டனை அன்புடையதாக இருக்கவேண்டும் என்பார் சிலர். வீட்டில் உள்ள தாய் தந்தை இருவரில் ஒருவர் அடிப்பவராக மற்றவர் அணைப்பவராக இருப்பதைக் காண்கிருேம். தந்தை அடித்தால் பெற்ற தாய் அனைத்துத் தேற்றுவாள். தாய் அடித்தால் தந்தை அணைத்துத் தேற்றுவார். அப்போதும் அந்த அடி அன்பின் அடியாகத்தான் இருக்கவேண்டும். அடியவரை ஆண்டவன் அந்த வகையிலே அருளொடு அன்பினைப் பின்னிப் அடித்து அருள்வான் என்ற உண்மையை அடித்தடித்து அக்கார முன் தீற்றிய அற்புதம் அறியேனே' என்று மாணிக்க வாசகரும், கின்பணி பிழைக்கில் புளியம் வளாரால் மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் ' என்று அப்பரும் கூறியுள்ளார்கள் என்பதை எண்ணும்போது நமது உள்ளம் நைகின்றது அல்லவா! ஆம் ஆண்டவனுடைய அந்த அன்பு கலந்த அடியில்ை அவர்கள் செம்மைப் பட்டுச் சிறந்தார்கள் எனவும் காண்கிருேம். ஆனால் அந்த அடி அன்பற்றதாக இருக்ககூடாது. அண்மையில் வாழ்ந்த அடியவர் ஒருவர் இந்த அடித்தலையும் அணைத்தலையும் பற்றிப் பாடிய பாடல் எனக்கு நினைவுக்கு வருகின்றது. தாய் தந்தையரில்