பக்கம்:மக்கட் செல்வம்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- அனைத்தா ? 125 ஒருவர் அடிக்க மற்றவர் அணைத்துத் தேற்றுவது உலக திே. ஆல்ை அந்தத் தாய்தந்தை என்ற இரண்டிடத்தை யும் ஒருவரே நிரம்பும் போது அவர் அடிக்காது அணைக் கத்தான் வேண்டும் என்கின்ருர் அவ்வடியவர். அவர் யார் என அறிய விரும்புகிருயா? ஆம்! அவர்தான் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள். இதோ அவர் வாக்கு. நீயே நன்கு படித்து அறிந்துகொள். 'தடித்த ஒர் மகனைத் தந்தை ஈண்டடித்தால் தாயுடன் அணைப்பள் தாயடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கெனக்குப் பேசிய தந்தையும் தாயும் * பொடித்திருமேனி அம்பலத்தாடும் புனித நீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மையப்பா இனி ஆற்றேன், (ஆருவது திருமுறை-பிள்ளைச் சிறுவிண்ணப்பம் 1) இப்படியே பல அடியவர்கள் அடித்தும் அணைத் தும் ஆண்டவன் அருள்சுரப்பதைப்பற்றிப் பாடுவார்கள். எனினும் நாம் பெற்றெடுக்கும் குழந்தைகளே அடித்தும் அணைத்தும் வளர்ப்பதில் இன்னும் வேறுபட்ட கருத்துக் கள் இருக்கின்றன என்பதை அறிவாய். ஆழ்ந்து சிந்திப்பின் அ ணே த் து வளர்ப்பதிலேதான் அன்புமகிழ்ச்சி-எல்லாம் கலந்திருக்கின்றன என்பதை நன்கு உணர முடியும். யார்தான் பெற்ற வாழ்வுச் செல்வ மாகிய குழந்தையை அடிக்க ஒருப்படுவர்? என்ருலும் சிலர் அடிக்கிருர்களே என்ருல் அது சூழ்நிலையில்ை விளையும் கொடுமையேயாகும். சில குழந்தைகள் பெற் ருேருக்குக் கோபத்தை உண்டாக்கும் வகையில் நடந்து கொள்ளுகின்றன என்பது உண்மைதான். அதற்குக் காரணம் அந்த இளங் குழந்தைகளுக்குப் பெற்றேரது வாழ்க்கை கிலேயோ பிறகுழ்நிலைகளோ தெரியாததுதான்.