பக்கம்:மக்கட் செல்வம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 அடித்தா ? அணைத்தா ? எது எப்படி இருந்தாலும் அடிக்காது குழந்தைகளை வளர்த்தலே நலம் பயப்பதாகும் என்பதே பலருட்ைய கருத்து. ஆயினும் உலகில் அந்த முறையில் பலரால் வளர்க்க முடியவில்லை. அதற்கு எத்தனையோ காரணங்கள் உள. அடிக்கவேண்டாம் என்று கூறுகின்றவர்கள்ே மாறு பட்ட குழ்கிலேயில் வாழ்வார்களேயானல் அவர்களும் அடிக்கவே முற்படுவார். ஆனல் அந்த வேளைகளில், ஒருவேளை அடித்தாலன்றித் திருத்தமுடியாத நிலை ஏற் படுகின்ற வேளைகளில்-வள்ளுவர் அரசனுக்கு உணர்த் திய அறிவுரையைப் பெற்ருேர்கள் கைக்கொள்ள வேண்டும். ஆம்! 'கடி தோச்சி மெல்ல எறியவேண்டும், இதனுல் குழந்தை உள்ளமும் கோடாது ; அதன் குறையும் மறைந்து நீங்கும். 'தம் பொருள் என்ப தம்மக்கள்’ என்று வள்ளுவர் கூறுவதற் கொப்ப உலகில் பிறந்தார்க்கு உயரிய செல்வம் மக்களே யாதலால் எதைக் கொடுத்தும் அச்செல்வத்தை ஒம்பிக் காத்தலில் பின்னடைய லாகாது. தமிழ்நாட்டுத் தாய்மை உள்ளம் என்றும் பின்னிட்டதும் கிடையாது. இவ்வுண்மை இன்றும் நிலவுகின்றது. இன்னும் என்றென்றும் தமிழ்நாட்டுத் தாய்மை நலமுற்றுத் தழைக்கும் எனக் கூறிக் கொண்டு இக்கடிதத்தை முடித்துக் கொள்ளுகிறேன். அதோ உன் குழந்தை மழலைமொழி கேட்கிறது. சென்று பார் - அன்புள்ள, அப்பா.