பக்கம்:மக்கட் செல்வம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பிள்ளைப் பேறு ருர்கள். உலகில் இப்ப்டியே மக்கள் இனம் பெருகிக் கொண்டே போல்ை இன்னும் சில நாட்களில் மனிதன் வாழாமல் திண்டாட வேண்டிவரும் என்று பெரிய பொ. ரு ளா தா ர நிபுணர்களெல்லாம்கூடப் பேசத் தொடங்கிவிட்டனர். அதற்கு அவர்கள் தடுப்பு வேலே களையும் மேற்கொள்ளத் தொடங்கிவிட்டனர். அவர்கள் மிகச் சுலபமாகக் கண்டவழி கருப்பத்தடை என்பது தான். பிள்ளைகளைப் பெருதே' என்று சொல்லுவது தான் அவர்கள் கண்ட சுருக்குவழி. சொல்லுவதோடு மட்டுமன்றி நம் நாட்டில் அரசாங்கத்தார் அத்துறையில் தீவிரமாகத் தொழிற்படத் தொடங்கியும் விட்டனர். இதை நினைத்தால் உண்மையில் வேதனைதான் உள்ளத் தில் பிறக்கிறது. - உயிரின வளர்ச்சியின் உச்சத்தில் வாழ்கின்ற மனிதனின் போக்கே இன்று விபரீதமாக அமைந்துள்ளது என்பதை நீ அறிவாய். நான் அதுபற்றி முன்னர்ப் பல நூல்களில் விளக்கி எழுதி உள்ளதையும் நீ படித்திருக் கிருய். அந்த மனிதனுடைய விபரீதப் போக்குக்கு இது ஓர் உதாரணம். உடலுக்கு ஏற்பச் சட்டையைத்தைத்து கொள்ளாமல் சட்டைக்கு ஏற்ப உடலேக் குறைக்கும் கதையைத்தான் இது நினைப்பூட்டுகின்றது. மக்கள் வாழ்வின் தேவைக்கு ஏற்றவகையில் உணவையும் உடை யையும் தயார் செய்ய இயற்கைச் சாதனங்கள் சூழ இருந்தும்கூட அந்த நிலையை மறந்த மனிதன் இப்படிக் குறுக்கேபாய நினைக்கிருன். இதற்கெல்லாம் காரணம் மனிதன் தன்னம்பிக்கையை இழந்ததோடு மனிதப் பண்பையும் இழந்தவகை இருப்பதுதான். பரந்த நிலப் பரப்பில் இன்னும் பத்தில் ஒருபகுதிகூட மனிதன் கைக்குள்ளும் உழவுக்குள்ளும் வரவில்லை. அந்த உழவுப் பகுதியும் சரியாகப் பயன்படுத்தப் படவில்லை. அரசாங்கம் தரும் கணக்கின்படியே பிற உலகநாடுகளில்