பக்கம்:மக்கட் செல்வம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டாவா ? 129 ஓர் ஏக்கர் நிலத்தில் விளையும் நிலைக்கும் நம் நாட்டு நிலைக்கும் எத்தனையோ மாறுபாட்டைக் காண்கின்ருேம். பரிசுபெறத் தக்க உயர்ந்த கிலேயே அப்படியாயின் மற்ற வற்றைச் சொல்லவும் வேண்டுமா?. இப்படி உழைப்பிலும் தன்னம்பிக்கையிலும் உறுதியற்று வாழும் மனிதன் காட்டில் வாழும்வரையில் மக்கள் இனம் வளரவிடுவதைத் தடுக்கத்தானே முயல்வான். அன்பின் குழந்தாய் ! இன்று நான் ஏதேதோ எழுதிக் கொண்டு போகி றேனே என்றுதானே எண்ணுகிருய். ஆம், இன்றைய உலகை-சிறப்பாக நம்நாட்டை-நினைத்துக்கொண்டால் வேதனைத்தான் பிறக்கிறது. அன்று தொட்டு இன்று வரை வாழ்ந்த அத்தனைப் பெரியவர்களும் போற்றிய பிள்ளைமை இன்பத்தைக் க ரு வ று க் கு ம் 'திருத் தொண்டை நினைத்தால் நடுக்கம்தான் உண்டாகின்றது. அதற்கு ஏற்ருல்போலப் பலகதைகளும், படக்காட்சிக குளும் கூட நாட்டில் படிக்கவும் காட்டவும் பெறுகின்றன. கதையிலும் படத்திலும் மட்டுமன்றி உண்மை வாழ்வி லேயும் இக்கொடுமை நிலவுவதை நாடு அறியும். அன்ருடம் நாளிதழ்களிலே வறுமையின் காரணமாக மக்களைக்கொன்று தாமும் மடியும் தாயாரைக் காண முடிகிறது. ஒருவேனே அப்படி முடியாது உயிர் ஊச லாடிக்கொண்டிருக்கும் தாய் அரசாங்கத்திடம் அகப் பட்டால் அவளே விசாரித்துத் தண்டனை தரவும் அரசாங் கம் தயங்கவில்லை; . அவளேக் கொடுமைக்கு உள் ளாக்கிய வறுமைய்ைபோக்க வழி காண்பதில்லை. வறுமையைப்போக்க வேண்டும் என்று அறிஞர்கள் சொன்னுல் அதற்குச் சிறந்த முறை கருவை அழித்தலே என மறுமொழிகூறும் இருபதாம் நூற்ருண்டின் நாக ரீகத்தை என்னென்று சொல்லுவது?