பக்கம்:மக்கட் செல்வம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

பிள்ளைப் பேறு


 அன்பின் செல்வி:!

இன்றும் சில நாடுகள் மக்களை பெற்று எண்ணிக்கையை வளர்க்கும் பணியில் ஈடுபடுகின்றன. அவ்வாறு "பிறக்கும் மக்களுக்கு வாழ வழியும் வகையும் புதுப் புது வகையில் அவ்வரசாங்கங்கள் செய்து கொண்டேதான் இருக்கின்றன. ஆனால்இங்கும் இன்னும் சில இடங்களிலும்தான் கருவறுக்கும் திருத்தொண்டு நடைபெறுகிற்து. இதற்குக் காரணம் இங்கே மக்கள் வறுமையால் வாடி இறப்பதைக் காணமுடியவில்லை என்றும், மக்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் வளர்ந்துகொண்டே போகிறது என்றும், அதைக் கட்டுப்படுத்தவே இந்தத்திட்டங்கள் என்றும் கூசாமல் கூறுவர். ஆனால் சற்று எண்ணிப் பார்த்தால் இக்கூற்று எவ்வளவு பொருந்தாத்து என்பது விளங்காமல் போகுமா?

உலகில் எத்தனையோ பகுதிகள் பண்படுத்தத் தக்க வழியிலிருந்தும் அவ்வாறு பண்படுத்த முடியாத கொடிய நிலையில் நாம் இருந்து வருகிறோம். சில நாடுகள் பாலை வனங்களைச் சோலை வனமாக்குகின்றன என அறிகிறோம். சில நாடுகள் கடற்கரை நெய்தல் மணலிலே நெல் பயிரிடும் பண்பாட்டை உண்டாக்கி உணவினைப் பெருக்குகின்றன என அறிகிறோம். நம் நாட்டிலோ உண்மையிலேயே பயிரிடவேண்டிய நிலங்கள் இருந்தும் பாழாகக்கிடக்கின்றன. ஏன்? தண்ணீர் இல்லையா? ஏன் இல்லை? எத்தனையோவற்றாத சீவநதிகள் வழிந்து கடலில் கலக்கின்றன. அவற்றை நாட்டின் பிறபகுதிகளுக்குத் திருப்பினால் என்ன? ஒரே நாடு என்று கூறிக் கொண்டே இந்நாட்டின் ஒரு பகுதியில் உள்ள ஆற்று நீரை மற்றொரு பகுதிக்கு அனுப்ப மு டி ய வி ல் லை. இப்படி இருந்தால் எவ்வளவு நிலமிருந்து எப்படி வளம் பெறும் ? இதனால்தான் நான் முன்னே சொன்னபடி