பக்கம்:மக்கட் செல்வம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டாவா ? - 131 துணிக்கு ஏற்ப-சட்டைக்கு ஏற்ப்-உடலேக் குறைக்கும் கொடுமைக்கு உள்ளாக வேண்டியுள்ளது. அருமைச் செல்வி - நம் சென்னே நகரில் கருச்சிதைக்கும் திரும்பங்கள்' பல இருக்கின்றன. ஆண்களுக்கென்றும் பெண்களுக் கென்றும் தனித்தனியாகப் பல இடங்கள் இருப்பதை அவற்றின்முன் தொங்கவிடப்பட்டிருக்கும் பலகைகளால் காணமுடிகின்றது. அவற்றைக் காணுந்தோறும் என் உள்ளம் மிகமிக வருந்தும். தம் பொருள் என்ப தம் மக்கள் என்றபாட்டிசைத்த வள்ளுவர் பிறந்த நாட்டிலா இத்தகைய விளம்பரங்கள் என எண்ணிஎண்ணிப் பெரு மூச்சு விடுவேன். என்செய்வது? இதுதான் நாகரிகம் எனக்கருதும் பொல்லாத அநாகரிகக் காலத்தில் நாம் வாழநேர்ந்ததே என்று வருத்தப்படுவதன்றி வேறு என்ன செய்யமுடியும்? - குழந்தை பிறக்கவில்லேயே என்று கோடானுகோடி தவம் செய்தும், காசி, இராமேச்சுவரம் என்று யாத்திரை செய்தும், அரசமரத்தடியில் நாகம் நிறுவிச் சுற்றி வழி பட்டும் பலமுறையில் வேண்டி வேண்டி நின்ற நாட்டிலே தான் இன்று இந்த வேண்டாத நிலை உண்டாகி இருக் கிறது. இவற்றுள் சில அறியாதவர்களும் சிக்கித்தடு மாறுவதை கான் அறிவேன். மக்கள் தேவை இல்லை என இதல்ை நிலைகெட்டு, பின் பெற்ற மக்களையும் பறி கொடுத்து வேறு மக்களைப் பெற்றுக்கொள்ளவும் முடியவில்லையே என ஏங்கும் 'தம்பதிகளே நான் நன்கு அறிவேன். எல்லாத் துறைகளிலும் செயற்கைச் சேற்றில் பட்டு உழலும் மனித சமுதாயம் இந்தத்துறையிலும் அச் சேற்றையே நாடிச் சென்றுவிட்டது. செல்வி ! எங்கெங்கோ சென்றுவிட்டேன். என்ருலும் எண் ணில்ை இதற்கும் ஓர் இயக்கமா என்ற வேதனைதான்