பக்கம்:மக்கட் செல்வம்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132 பிள்ளைப் பேறு பிறக்கிறது. இன்றும் சிலர் மக்கள் இல்லேயே என வாடுவதையும் காண முடிகின்றது. இதற்கிடையில் இந்தக் கொடுமையும் வாழ்கிறதே. இயற்கைக்குத் தெரியும் மக்களினத்தை பெருக்காமல் தடுக்க. ஆம்! அது தன் வழியில் செயலாற்றிக் கொண்டுதான் வருகிறது, 'எல்லாம் தன்ேைலயே நடக்கின்றன, என்று தருக்கித் திரியும் மனிதனுக்கு அவ்வப்போது இயற்கை தலையி லடித்துப் புத்தி புகட்டுகிறது. என்ருலும் அவன் கர்வம் அடங்கவில்லை. அந்தக் கர்வத்திேைலயே இதுபோன்ற குருட்டு யோசனைகளில் அவன்புத்தி செல்லுகின்றது. என்ருலும் இந்த நிலை என்றும் நீடிக்குமா என்பது ஐயம் தான். செயற்கை என்ருவது செம்மை வாழ்வு வாழ்ந்த துண்டா ? காலம் பதில் சொல்லும். அன்புடைச் செல்வி, இவற்றைப்பற்றியெல்லாம் அறிய அறிய உனக்கு வியப்பாக இருக்கின்றது அல்லவா? ஆம். இந்த நூற் ருண்டு நாகரிகமே அப்படிப்பட்டதுதான். உண்மைக் கெங்கும் இடம் கிடையாது. அது மண்ணுக்குள் மறைந்த மாணிக்கமாகத்தான் மங்கிக் கிடக்கின்றது. போலிகளே எங்கும் தலைவிரித்தாடுவதைக் காண்கின்ருேம். இன்று உலகில் ஒளிவிடும் போலி வைரங்களோடு உண்மை வைரங்கள் போட்டியிட முடியுமா? உனக்குத் தெரியுமே! உயர்ந்தரகக் காஞ்சிபுரம் பட்டுச்சேலையை விடப் பகட்டாக இருக்கும் வேறு பட்டுக்களைத்தானே பெரும் பாலான மக்கள் விரும்புகின்றனர். இப்படி எத்தனை எத்தனையோ காட்டலாம். ஆம். அதுபோன்றே தொல் காப்பியர் காலந்தொட்டு இன்று வரை வந்த மெய்ச் செல்வமாகிய மக்கட் செல்வத்தை மறைக்க இந்தப் போலிப் பிரசாரம் கிளம்பியிருக்கிறது. எனினும் காலத் தேவன் இதற்குத்தக்க விடையளிப்பான் என்பது உறுதி.