பக்கம்:மக்கட் செல்வம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேண்டவா ? 133 ஒருசிலர் இந்தப் பிரசார எல்லேக்குள் வேறுவகை யாக உட்படுகின்றனர். சில ஆடவரும் பெண்டிரும் மணம் செய்துகொள்ளாமலே வாழ்வைக் கழிக்கின்றனர். அவர்கள் இயற்கை வாழ்வு வாழத் தெரியாதவர்கள்தாம். உலகின் இயற்கை வாழ்வு, ஆணும் பெண்ணும் கூடித் தாமும் வாழ்ந்து வையத்தையும் வாழ வைப்பதுதான். கடவுள் காட்சியைக் காட்டவந்த அடியவர்களெல்லாம் கூட இந்த உண்மையைத் தான் காட்டுகின்றனர். கயிலை யில் இறைவனேக் கண்டதாகக் கூறும் அப்பர் ஐயாற்றில் ஆண் பெண் இணைந்த காட்சியைத்தான் கயிலைக் காட்சி யாகக் காட்டுகின்ருர். பிடியொடு களிறு', கோழி யொடு சேவல் வரிக்குயிலொடு பேடை இப்படி ஆணும் பெண்ணும் கலந்திருப்பதே கயிலைக் காட்சி. அதே நோக்கில்தான் திருமாலும் தன் துணைவியை மார்பில் வைத்திருப்பதாகவும், சிவன் சக்தி யை உடலின் பாதியில் வைத்திருப்பதாகவும் கூறுவர். திருமூலர் தம் திருமந்திரத்தில் இக்கரு வளர்ச்சியைப் பற்றி 41, பாடல் களில் விளக்கியுள்ளார். எனவே ஆண்பெண் இரு வரும் இணைந்துவாழாத வாழ்வு செயற்கை வாழ்வு என் பது மட்டுமன்று கடவுள் நெறிக்குமாறு பட்டதும் கூட. ஆகவே தமிழ் நாட்டு இல் ல ற வ | ழ் வு. தான் தெய்வநெறியாக நின்று மக்கட் செல்வத்தை நாட்டில் மலர வைப்பது. அதேைலயே வள்ளுவரும் 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்று காட்டினர். இந்த உண்மையை உணராது சிலர் மணம் வேண்டா மென்று தியாக வாழ்வில் வாழ்வதாகச் சொல்லிச் செயற்கைச் சேற்றில் சிக்கித் தவிக்கின்றனர். ஆம் இவர்கள் வாழ்வும் நான் முன்பு காட்டிய செயற்கை வைரம் போன்றதேயாம். திருந்துவார்களா இவர்கள் ? மற்றென்றும் இங்கே கூற வே ண் டும். மனித வாழ்வின் இல்லற நெறியில்லையேல் உலகம் என்ருே.