பக்கம்:மக்கட் செல்வம்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பிள்ளைப் பேறு சுடுகாடாக மாறியிருக்கும். வள்ளுவர் கதையையும் அவர் பிறந்த முறையையும் உண்மை என்று கொண்டு நீ ஒன்றை நினைத்துப்பார். அவருடைய பெற்றேர்கள் இரண்டு மூன்று குழந்தைகள் பிறந்தபின் இக் குடும்பக் கட்டுப்பாட்டுச் சே ற் றி ல் சிக்கியிருப்பார்களானல் உலகம் போற்றும் வள்ளுவரை நாம் பெற்றிருக்க முடியுமா? அதுபோன்றே அண்ணல் காந்தியாரின் பெற்றேர் ஓரிருமக்கள் பிறந்தபின் குடும்பக் கட்டுப் பாடுக்குள் அழுந்தியிருப்பாராயின் நம் ம் த லே முறையில் ஒரு வழிகாட்டியை இழந்திருக்கமாட்டோமா? இப்படியே திருநாவுக்கரசரது பெற்ருேரும், விவேகா னந்தர் பெற்ருேரும், ஐன்ஸ்டைன், கியூடன் போன்ற மேதைகளின் பெற்ருேரும் பிற வழிகாட்டிகளின் பெற் ருேரும் இக்கட்டுப்பாட்டுக்கு அடங்கியோ அன்றி மணம் செய்துகொள்ளாமலோ இருந்திருப்பார்களானல் உலகம் என்னுகி யிருக்கும்? அறிவார் யார் நல்லார் பிறக்கும் குடி?’ என்று தமிழ் நாட்டில் வழங்கும் மொழி உனக்குத் தெரியுமே. எனவே எந்த அன்னேயின் மணிவயிற்றில் எத்தகைய ஞானக் குழந்தை பிறக்குமோ? யார் அறிவார் ! ஆம் அத்தகைய உலகுக்கு நலம்தரும் இன்பப் பூங்காவின் இடைப்பட்ட அன்புப் பாதையை அடைப்பவரே இக்கட்டுப்பாட்டுக்கு அடங்குபவரும் மணம் வேண்டாம் என்பவரும். - உனக்கு ஓர் ஐயம் பிறக்கலாம். எங்கோ பல கோடிக்கு ஒருவர் பிறந்து உலகை வாழ்விப்பதற்காக அனைவரும் கட்டுப்பாடு செய்யாதிருக்க வேண்டுமா? என்ற கேள்வி எழுவது இயல்புதான். அந்தப் பல கோடிக்கு ஒன்று எங்கு பிறக்கும் என்று தெரிந்தா லன்ருே மற்றவர் வேறுவழி செல்ல முடியும்? காந்தியா ரின் பெற்ருேர் அவர் பிறக்குமுன் அறிவார்களா அவர் வாழ்ந்த அறவாழ்வுபற்றி ? இதோ இன்று வாழும்