பக்கம்:மக்கட் செல்வம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேண்டாவா?

135

 காமராசரின் அன்னையார் அவரைப் பெற்றெடுக்குமுன் பாராண்டு சிறப்பார் எனக் கனவு கண்டிருக்க முடியுமா? அதுவும் எல்லாருக்கும் எல்லா வாய்ப்புக்களும் சிறக்க நிற்கும் இக்காலத்தில் எப்படிக் காட்ட முடியும்? சேற்றில் செந்தாமரை போல் எங்கு யார். பிறப்பார்கள் எனக் காட்ட முடியுமா ?. உலகை உய்விக்க வந்த அடியவர்களும், அறிஞர்களும், ஆணயாளர்களும் எத்தகைய குலங்களில் பிறந்தார்கள் என். பதை உலக வரலாறு காட்டுகிறதே. கபிலரகவல்’ என்ற நூலில் அவர் அன்றைய அறிஞர்கள் பிறந்த குடியையும் முறையையும் காட்டியுள்ளனரே. எனவே மற்றெதற்கு இன்றேனும், அத்தகைய நல்லவர் பிறக்கும் நாளும் குடி யும் நாம் அறியோம் என்பதல்லை, அந்த வழிகாட்டிகள் வருவதற்காகவாவது இச் செயற்கைச் சேற்றில் நாம் இறங்கக்கூடாது என நான் விரும்புகின்றேன். இன்னும் இந்த கட்டுப்பாட்டை விதித்துச் செயலாற்றும் தலைவர்கள் சற்றுச் சிந்தித்தால் ஓர் உண்மை விளங்கும். ஆம். அவர் தம் பெற்றோர்கள் இக்கட்டுப்பாட்டை எண்ணியிருந்தால் இவர்கள் வாழ்வு ஏது? இந்த விதண்டாவாதம்தான் ஏது ?

உலகம் பரந்து கிடக்கிறது. பல உலகங்களைக் கண்டு குடியேற வாய்ப்பு இருக்கிறது. இந்த நாளில் உழைப்பை மறந்து, தன்னம்பிக்கையை மறந்து, இக் கட்டுப்பாட்டில் இறங்குவதுபோன்ற அநாகரிகச் செயல்' வாழ வழியில்லை. அதனுல் குழந்தை பெற வேண்டாம்; என்ற கட்டுப்பாட்டுச் செயல் - இந்த உலகத்திற்கே வேண்டாத ஒன்று. அதற்குப் பதில் மக்களினம் ஒன்றாகத் திரண்டு உள்ள உரமும் உடல் உழைப்பும் கொண்டு. பாடுபடுமானல் இன்றைய மக்கட் தொகையைப்போல் இரண்டாயிரம் மடங்கு பெருகினாலும் அத்தனை பேரையும் வாழவைக்க வழியுண்டு என்பது திண்ணம்.