பக்கம்:மக்கட் செல்வம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழவி

39



கின்றோம். அவ்வாறு செய்வது மிகமிகத் தவறு ஆகும் ! "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்" என்ற பழமொழிப் படி அச்சிறுவயதில் மற்றவரை வேடிக்கையாகப் பேசப் பழக்கும் நடையை ஒட்டியேதான் குழ்ந்தைகளின் உள்ளமும் உருவாகும். எனவே பெரியவர்களாகிய நாம் குழந்தையை நல்ல நிலையில் உருவாக்கும் வகையில் நடக்க வேண்டும். இன்று நாட்டில் ஒரு சில இனத்தவர் குழந்தைகள் சிறக்கக்கற்று ஓங்குவதற்கும், ஒருசில இனத்தவர் குழந்தைகள் கல்லாது ஏங்குவதற்கும் இப் பெற்றோர் பழக்கவழக்க நிலைகளை காரணமாக அமைகின்றன என்பர் ஆய்வாளர். எனவே உணவு, உடை, உற்ற பல பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்திலும் பெற்றவர் செம்மை நலம் உற்றவர்களாகவே இருக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் குழந்தையைப் பெற்றவர் போற்ற வேண்டிய நிலையினை விளக்கிக் கொண்டே போகலாம். எனினும் அதனால் இக்கடி தத்தை நீளவிட்டு உன் பொறுமைக்கு எல்லைகாண நான் விழையவில்லை. அதுபற்றிய நூல்களை நீ ஒய்வு உள்ள போது படித்து அறிந்து, நன்கு உன் குழந்தையை வளர்ப்பாய் என்பதில் எனக்கு நம்பிக்கை உண்டு. மேலும் இது பற்றி முன் ஒரு கடிதத்திலும் காட்டியுள்ளேன். இங்கு நான் ஒன்றை மட்டும் கூறி இக்கடிதத்தை முடித்துக் கொள்ளுகிறேன்.

இவ்வாறு குழந்தையின் நலமே தன் நலமாக ஒம்ப வேண்டிய நிலையில் தாய் தன் சேயைக் காக்காவிடின் அக்குழந்தை எவ்வாறு நலிந்து நையும் என்ற உண்மையைச் சங்க காலப் பெரும்புலவர் பரணர் என்பவர் நன்கு விளக்குகின்றார். கபிலர், ஒளவையாரைப் போன்றே பரணரும் அக்காலப் பெரும்புலவர் என்பதையும் அவர் பாடிய பலபாடல்கள் சங்க இலக்கியத்தில்