பக்கம்:மக்கட் செல்வம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கருவில் குழந்தை II

97


‘ஒருமட மாது ஒருவனு மாகி
       இன்ப சுகந்தரு அன்பு பொருந்தி
உணர்வு கலந்து ஒழுகிய விந்து
       ஊறு சுரோணித மீது கலந்து
பனியிலோர் பாதி சிறு துளிமாது
       பண்டியில் வந்து புகுந்து திரண்டு
பதும அரும்பு கமட மிதென்று
       பார்வை மெய்வாய் செவிகால் கைகளென்ற
உருவமு மாகி உயிர்வளர் மாதம்
       ஒன்பது ஒன்றும் அகன்று மடந்தை

உதர மகன்று புவியில் விழுந்து’

பிறகு குழந்தை உலகில் வளர்கின்றது எனக் காட்டும் அவர் திறம் எண்ணத்தக்கது அன்றோ! 117 அங்குல அளவைத்தான் போலும் ‘பனியிலோர் பாதி’ என இவர் குறிக்கின்றார்.

இனி, பல விஞ்ஞானக் கருத்துக்களைக் காட்டிய மாணிக்கவாசகர் இக் கரு வளர்ச்சியைப் பற்றியும் சொல்லியிருக்கிறார். மானுடப் பிறப்பில் மாதா உதரத்து இக்கரு தோன்றிப் பத்துத் திங்களிலும் உண்டாகின்ற எல்லாத் துன்பங்களையும் தாண்டி உலகில் பிறக்க முடிகின்றது என்பதை அவர் காட்டும்போது நாம் அக்காலத்திலேயே தமிழ் நாட்டில் இருந்த அறிவைப் போற்றாதிருக்க முடியுமா? மாணிக்கவாசகர் திங்கள் தோறும் என்னென்ன மாற்றங்கள் நடைபெறுகின்றன என்பதைத் திட்டமாக அறிந்து கூறுகிறார் எனக் காணமுடியாவிட்டாலும், ஒவ்வொரு திங்களிலும் ஏதேதோ மாறுபாடுகள் நடைபெறுவதை விளக்க முயல்கிறார் என்பதை மட்டும் காண முடிகின்றது. இதோ - அவர் அடிகளையே தருகிறேன். நீயே படித்துப் பார்.