பக்கம்:மக்கட் செல்வம்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

கருவில்


“மானிடப் பிறப்பினுள் மாதா உதரத்து
ஈனமில் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதி தான்றியின் இருமையில் பிழைத்தும்
இருமதி விளைவின் ஒருமையில் பிழைத்தும்
மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும்
ஈர்இரு திங்களில் பேர் இருள் பிழைத்தும்
அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்
ஆறு திங்களில் ஊறு அலர் பிழைத்தும்
ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும்
எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்
ஒன்பதில் வருதரு துன்பம் பிழைத்தும்
 தக்க தசமதி தாயோடு தான்படும்

துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்”

உலகில் குழந்தை பிறந்து பின் ஆண்டாண்டு தோறும் வளர்ந்து வருகின்றது என்கின்றார். மணிமொழியார், இவ்வடிகளின் காட்டும் இருமை, ஒருமை, மதம், இருள், முஞ்சுதல், ஊறு அலர், புவிபோன்ற பல்வேறு மாறுபாட்டு நிலைககா நம்மால் அறியக்கூடவில்லை. பழங்காலச் சமயத் தலைவர்களும் பிற புலவர்களும் இவ்வாறு தான் பல உண்மைகளை ‘இலைமறை காயா’கக் சுட்டிவிட்டனர். எனவே எத்தனையோ உண்மைகள் மறைந்துவிட்டன. என்றாலும் இத்தகைக் குறிப்புக்களைக் கொண்டு நம் விஞ்ஞானிகள் காணும் உண்மைகளையெல்லாம் அவர்கள் எப்படியோ அறிந்து தமிழ் நாட்டில் அவற்றை வாழ வைத்து இருந்தார்கள் என்பதை எண்ண மகிழ்ச்சி பிறக்கிறதல்லவா? திருமூலர் இக் கருவளர்ச்சியைப் பற்றி 41 பாடல்கள் பாடியுள்ளார்.

அன்பின் அரசி!

மறுபடியும் உன்னைப் பழந்தமிழ் இலக்கியச் சோலைக்குத்தான் அழைத்துப் போகிறேன் இல்லையா! வேண்டாம்; இனிச் செல்லவில்லை. இனி இன்றைய மேனாட்டு அறிஞர்கள் கருவில் வளரும் குழந்தையைப்