பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

姆露 தமிழகத்தில் வாழ்ந்து வருகின்ற நரிக்குறவர்கள் நாகரிக வளர்ச்சியடையாத பழங்குடி மக்கள். பிற மாநிலங் களிலும் இவர்கள் காணப்படுகின்றனர். வாக்ரி' என்னும் பெயரில் நாடோடிகளாக வாழும் மக்கள் இவர்கள். தமிழ் நாட்டில் வாழும் ஏனைய பழங்குடி மக்களுக்கும்,நரிக்குறவர் கட்கும் மிக்க வேறுபாடுகள் உள்ளன. நரிக்குறவர்கள் குஜராத், மேவார் ஆகிய இடங்களி லிருந்து இங்குக் குடியேறியவர்கள் என்பது அவர்களின் மொழியான வாக்ரி போலி'யாலும், நாடோடிப் பாடல் கள், வாழ்க்கைமுறை முதலியவற்றாலும் அறிய முடிகிறது. கோத்தர், தோடர், படகர் போன்ற மலைவாழ் பழங்குடி மக்கள் திராவிடமொழிக் குடும்பத்தில் உள்ளடங்கிய மொழி யினைப் பேசும்பொழுது, நரிக்குறவர்கள் மட்டும் லம்படி யினைப் போன்ற இந்திய-ஆரிய (indo-Aryan) மொழிக் குடும்பத்தில் உள்ளடங்கிய ஒரு மொழியினைப் பேசுவது அவர்கள் தொன்றுதொட்டுத் தமிழகத்தில் வாழ்ந்தனர் அல்லர் என்பதை வெளிப்படுத்தும். எந்த மாநிலத்தில் வாழ்கின்றார்களோ அம்மாநிலத்தின் மொழியையும் கற்றுக் கொண்டு, இருமொழி பேசும் மக்களாக உள்ளனர். பதின்மூன்று அல்லது பதினான்காம் நூற்றாண்டில் வந்து குடியேறிய நவிக்குறவர்கள் சமுதாய அமைப்பு, கலாசாரம், பழக்க வழக்கங்களில் தனியே ஒதுங்கி வாழ்கின்றனர். பிறரைத் தம்மினமாக்கவோ, தாம் பிறருடன் கலந்து! தம்மை மாற்றிக்கொள்ளவோ முயலவில்லை. நரிக்குறவர்களைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. குறவஞ்சி, குறம், சிறுகதைகள், நாடகம், தெருக்கூத்து, சினிமா முதலியவற்றில் பொது வாகக் குறவன்-குறத்தியைப் பற்றியும், நாடகம், தெருக் கூத்து, சினிமா முதலியவற்றில் நரிக்குறவன் நரிக்குறத்தி யினைப் பற்றியும் நடித்துக் காட்டுகின்றனர். இவை போதுவாக விவரிக்கின்றனவேயன்றிக் குறிப்பாக விளக்கு வனவல்ல.