பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&} 。 தெய்வங்கட்கு ரொட்டி, பொங்கல். தேங்காய், பழம், துபதீப ஆராதனைகளும், நீராட்டுதல், எருமைக்கடா, ஆட்டுக்கடா போன்ற உயிரைப் பலியிடுதலும் உண்டு. ஆரம்பத்தில், பூசுனைக்காயினை வெட்டிப் பலியிட்டனர். பின்னர்க் கருங்குரங்கைப் பலியிட நினைத்து அதைக் காட்டி னின்றும் கொணர்ந்தபொழுது கைகூப்பித் தொழுததாம். ஆதலின் ஒரு கையினை மட்டும் வெட்டிக்கொண்டு விட்டு விட்டனர். அப்பாவத்தைப் போக்க வெள்ளியினால் கை போன்ற உருவத்தை ஹாஜா என்பவன் செய்து வழிபட் டானாம். ஒருநாள் தாதாஜி குளத்தில் குளித்துக்கொண்டி ருக்கும் பொழுது அழுக்கினால் எருமை செய்து உலவவிட் டார். அது குளத்தருகில் மேய்ந்து, அந்நீரைக்குடித்து வாழ்ந்து வந்தது. மறுநாள் தாதாஜி வந்தபொழுது அவ் வெகுமை பதினான்கு முழம் நீண்டு வளர்ந்த கொம்பினால் விரட்டியதாம். பயந்து போன தாதாஜி சில் பிலி பகாடு’ எனும் பறவை வாழும் மலையில் ஒளிந்துகொண்டார். பின்னர் வெக்ஸி (காளி) அந்த எருமையினைக் கொன்று விட்டாள். அதன் வழக்கமாக இன்றும் இவர்கள் எருமைக் கடாவைப் பலியிட்டுக் காளிச்சிலைமீது ரத்தம் பூசு கின்றனர். மகிஷாசுரமர்த்தினியின் புராணக் கதையும் நரிக் குறவர்களின் நாடோடிப் பாடலும் ஒத்த நிகழ்ச்சியை விவரிக்கின்றன. மேலும், அவர்களுடைய திருமண உறவு தோடர், கோத்தர். இருளர், பணியர், படகர் போன்ற மலைவாழ் மக்களினின்றும் மாறுபட்டுக் காணப்படுகிறது. வயது வந்த ஆணோ பெண்ணோ தனித்து வாழக்கூடாது. அவர்களின் வயது வரம்போ, முன்னேயிருந்த பழக்க வழக்கங்களோ இதற்குத் தடையில்லை. சமுதாய ஒழுக்கமும், அன்றாட வாழ்வில் ஒருவர் மற்றவரின் உதவியுடனும் வாழவேண்டிய பொருளாதார வாழ்க்கைப் பிரச்சினையை அடிப்படை யாகக் கொண்டு அமைத்துக் கொண்டதாகும். அன்பின் அடிப்படையைவிடத் தேவையைப் பூர்த்தி செய்வதாக உள்ளது. குழந்தைகளின் திருமணம், விதவை மறுமணம்,