பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ {} றனர். அது பாதுகாப்பையும் ஒரே சமுதாய அமைப்பை யும் மாறாமல் பேணிவருகிறது. இதனால் நரிக்குறவர்கள் வேற்றின மக்களுடன் கலக்காமல் தனித்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் தனித்த உடையாலும், அழுக்கான துணி மணிகளாலும், சுற்றுப்புறங்களாலும் ஒருவித முடை நாற்றம் வீசுகிறது. ஆதலின் நாய்கள் இவர்களின் வருகை யைக் குரைத்துக் கட்டியம் கூறி வரவேற்கின்றன. நாகரிக மடைந்த ஏனைய பழங்குடி மக்களும் இவர்களுடன் கலந்து பழக விரும்புவதில்லை நரிக்குறவர்களையும் நல்ல குடிமக் களாக மாற்றத் தொண்டு மனப்பான்மையும், அரசினரின் ஆதரவும் இருந்தால் சுகாதாரமும், கல்வியறிவும் பெற்றுப் பொருளாதாரத் துறையிலும் மானிட இயலாருக்கும், வரலாற்றாசிரியர்கட்கும், மொழியியலாருக்கும் பயன்படும் நல்லதொரு இனமாக விளங்குவர்.