பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9罗 ளுடைய பூசைமுறைகளை ஒத்திருப்பது கவனிக்கத் தக்கது. அவர்களுடைய தெய்வங்கள் பெண் தெய் வங்களாகயுள்ளன.அவை செழிப்பைக் குறிக்கும் பெரிய மார்பும், பெரிய வயிறும் கொண்டவை. கையில் மலரும், கிளியும் உள்ளன. எனவே இவர்கள் பண்டைக் காலத்தில் பெண்ணாதிக்க புராதன விவசாயச் சமுதாயமாக வாழ்ந்தார்கள் என்று தோன்றுகிறது. அவர்களுடைய அறிவுத்திறன், அண்டைக் கிராம மக்களின் அறிவுத்திறனை விட அதிகமாக இருப்பதை ஆய்வாளர்களின் - ள் வளி விவ ங் க_ள் காட்டுகின்றன. நிலைத்த வாழ்க்கையும், தொழில் முறை மாற்றமும், படிப்பு வாய்ப்புகளும் அளிக்கப் ப்ட்ட்ால் இவர்கள் சமுதாயத்தில் சிறந்து உயர்நிலை பெறுவார்கள். -பதிப்பாசிரியர்.1 கரிக்குறவர்கள் அல்லது குருவிக்காரர்கள் என்று கூறப் படும் இனக்குழு மக்கள் தென்னிந்தியாவின் நாடோடி இனத்தவர் ஆவர். இவர்கள் மத்திய இந்தியாவிலிருந்து இடம் பெயர்ந்து வந்ததாகக் கருதப்படுகிறார்கள். தென் னிந்தியாவில் சில நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தாலும் தங்கள் தனித்தன்மையைக் காப்பதில் மிகவும் கவனமாக இருந்துவரும் இவர்கள் வேறு எந்த இனத்துடனும் கலந்து விடவில்லை. இந்தியா விடுதலை பெற்றதும், அதன் பின் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்பட்ட சமுதாயப் பொருளா தார மாற்றங்களும், தொழில் நுட்ப வளர்ச்சியும் மிகவும் அருகிய அளவிலேயே இவ்வினத்தைப் பாதித்துள்ளன. இது ஒரு வேளை அவர்களின் கல்வியின்மையின் காரண மாக் இருக்கலாம். ஏனெனில், இன்றும் கூட இவ்வினத்தில் மிகக் குறைந்த அளவிலேயே குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்கிறார்கள். இவர்களின் விநோதமான உடைகள், பழக்க வழக்கங்கள் காரணமாகத் தங்கள் குழ்ந்தைகளைப் பிறர் அவமானப்படுத்துவார்களென்று இவர்கள் அஞ்க் கிறார்கள். A 633-7