பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 இக் குறவர்க்ள் தங்கள் நாடோடி வாழ்க்கையைக் கை விட்டு, பயனுள்ளதும் ஊதியம் தருவதுமான தொழில் களை மேற்கொண்டு ஓரிடத்தில் நிலைத்து வாழும்படி செய்ய முயற்சிகள் தடைபெற்று உள்ளன. செங்கற்பட்டு மாவட்டத்தில் சோழவரம் பஞ்சாயத்து யூனியனைச் சார்ந்த ஒர்க்காடு கிராமத்திற்கு வெளியே மேற்கூறிய முயற்சியின் அடிப்படையில் ஒரு குறவர் குடியிருப்பு அமைந் துள்ளது. பத்து வருடங்களுக்கு மேலாக இருபத்தாறு குறவர் குடும்பங்கள் நிலைத்து வாழ்கின்றன. அதிர்ஷ்டவச மாக அவர்களிடையே ஆசிரியரும் சமுதாய ஊழியருமான திரு. ரகுபதி என்பவர் வாழ்கிறார். திரு. ரகுபதி இளமைக் காலத்திலிருந்தே நரிக்குறவர் இனத்தைக் கல்விபெறச் செய்யவும் நவீனப்படுத்தவும் செய்வதில் மிகுந்த செயல் ஆர்வம் கொண்டவர். அவர் ஒர் இளம் நரிக் குறவப் 姿Y苇 செய்து கொண்டவர் என்பது இங்கு மிகவும் குறிப்பிடத் தக்கதாகும். (நரிக்குறவர் இனத் திற்கும் வேறு எந்த இனத்திற்கும் இடையே நடைபெறும் மிகவும் அரிதான திருமணங்களில் இதுவும் ஒன்று.) சாதிப் பிரிவுகளும் சமயமும் எருமைமாடு பலிகொடுப்பவர்கள், ஆடு பலி கொடுப் பவர்கள் என இருபெரும் முக்கியப் பிரிவுகள் நரிக்குறவர் களிடையே உள்ளன. ஆடு பலி கொடுக்கும் பிரிவினர் ஒரக் காடு கிராமத்தில் அதிகம் உள்ளனர். அவர்களிடையே குஜராத்தி (ஒருவேளை குஜராத்திலிருந்து), மேவாடு (ஒரு வேளை மேவாரிலிருந்து) தாபி, சாலியோ என நான்கு வகைச் சாதிகள் அல்லது பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு குழுவும் அவர்கள் வணங்கும் தேவதைகளைக் கொண்டு வேறுபடுத்தப் படுகிறது. அத்துடன் பல்வேறு வகைப்பட்ட பெயர்களை உடைய சிறு குழுக்களாலான உட்பிரிவுகளும் இவர்களிடையே உள்ளன. குஜராத்திகள் பர்வதீஸ்வரி அல்லது பர்வதம்மனை (பார்வதி) வழிபடுகிறார்கள். ஜிம்ளோ, கோவிந், ராமு, பான்வார், மாணிக்கியோ என ஐந்து பிரிவுகள் இவர்களிடையே உள்ளன. மேவாடுகள் பெண்னைத்