பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 9 பரத மீனாட்சி அல்லது பதுரை மீனாட்சியை வழிபடு கிறார்கள். இவர்கள் ஏட்டோ, டாக்கியோ, ஹீரோ, நவால், தாமே என ஐந்து பிரிவுகளாக உள்ளனர். காளி அல்லது துர்க்கையை வழிபடும் தாபி குழுவினரிடையே டாட்டோ, மணியோ, மக்ரோ என்னும் மூன்று பிரிவுகள் உள்ளன. செல் அல்லது கன்னியம்மாவை வழிபடும் சாலியோ குழுவினரிடம் வீதியோ என்னும் ஒரே ஒரு பிரிவு பட்டும் உண்டு. தாபி குழுவில் டாட்டோ என்னும் உட்பிரிவைச் சார்ந்தவரும் மெலிந்த நடுத்தர வயது மனிதருமாகிய பரதேசி என்பவர் எங்களுக்கு நரிக்குறவர்களைப் பற்றிய தகவல்களையும் தமது குடும்ப வரலாற்றையும் கூறினார். அவர் கூறியபடி, காளிராஜா என்பவன்தான் முதல் குருவிக் காரன். மன்னனாகிய அவன் காட்டிற்கு வேட்டையாடச் சென்று வழிதவறி விட்டான். அவ்வேளை காளிதேவதை அவன் முன் வெளவால் வடிவில் தோன்றி நீ காட்டில் பெத்துப் போடு; நான் மேட்டில் வளர்க்கிறேன்' என்று கூறி அவனைக் காப்பதாக உறுதி அளித்தாள். அதிலிருந்து அம்மன்னனைச் சார்ந்த குழுவினர் காளியைத் தங்கள் தெய்வமாக ஏற்றுக் கொண்டனர்.பரதேசி தமது முன்னோர் கள் பதினைந்து பேர்களின் பெயர்கள் ஆதி காளி ராஜா விலிருந்து தொடங்கி-வாட்சின்யா, தடார், தாம்சி, மேடால், புஞ்சி, துலாராம், மாகூன், மாகுந்தார், மிான்யோ, சந்தால், அப்பா, ஹர்னா, குல்பானிசிங், ராமன்சிங், பரதேசி எனத் தம்வரை தம்மூதாதையரின் பெயர்களை வரிசையாகக் கூறுகிறார். அவருக்குக் குமார் என்னும் மகனும் முன்னா என்னும் பேரனும் இருக்கிறார் கள்.நம்மில் சிலருக்கு நமது மூத்த பாட்டனார்களின் பெயர் கள் கூட நினைவில்லாமல் இருக்கும்போது, கல்வியறிவற்ற பரதேசி தம் மூதாதைகளின் நெடிய பெயர்ப் பட்டியலை நினைவில் வைத்திருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. நரிக்குறவர்கள் அனைவரும் இத்துக்கள் ஆவார்கள். அவர்களுக்குரிய தனி முறையில் அவர்கள் சமய உணர்ச்சி