பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮伊{} மிக்கவர்களாகவே உள்ளார்கள். கோவிலுக்கு அவர்கள் அபூர்வமாகச் சென்றாலும் தங்கள் கடவுள்களைத் தங்கள் இருப்பிடங்களிலே வணங்குகிறார்கள். அக்கடவுள்களின் உருவங்கள் ஒரு துணி மூட்டையில் வைக்கப்பட்டு, அத் துணி மூட்டை சாமி மூட்டை என்று அழைக்கப்படுகிறது. ஒவ் வொரு குடும்பத்தாருக்கும் ஒரு சாமி மூட்டை உண்டு. அம் மூட்டையானது குடும்பத் தலைவரால் மரியாதையாகவும் கவனமாகவும் கவனிக்கப்படுகிறது. சாமி மூட்டையில் துணி பில் பலி கொடுக்கப்பட்ட விலங்குகளின் இரத்தத் தொகுதி யும், பலி கொடுக்கப்பட்ட விலங்கின் இரத்தத்தில் தோய்க் கப்பட்ட துணியும் அடங்கி இருக்கும். இவற்றை அவர்கள் பல பரம்பரையாக உள்ளதாகக் கூறிக் கொள்வார்கள். வெள்ளி வார்ப்புகளில் அமைந்த அவர்களின் தேவதை களின் கு வடிவங்கள் (சுமார் 10 செ. மீ. உயரம் உடையவை) முக்கோண வடிவமான மெத்தை போன்ற பைகளில் வைக்கப்பட்டுள்ளன. அந்த உருவங்கள் இரண்டு கைகள் உடையதாகவே உள்ளன. அதில் ஒரு கைகூட வழக்கமான தேவதைகளின் அபயம் அளிக்கும் தோற்றத் திலோ, வரம் கொடுக்கும் தோற்றத்திலோ அமையவில்லை. ஒவ்வொரு உருவமும் நீண்ட பாவாடையும், உயர்ந்த தலை யனையும், வளையல்களும், கைப்பட்டையும், சங்கிவியும் அணிந்துள்ளன. கச்சு அணிந்துள்ள முதல் உருவமானது பெரிய வயிறுடையதாய் இரண்டு கைகளிலும் பூவினை ஏந்தி, இரண்டு முனைகளிலும் இணைக்கப்படாத ஒரு நீண்ட மாலையையும் அணிந்துள்ளது. இரண்டாவது மூன்றாவது உருவங்களும் கச்சு அணிந்து காணப்படா விட்டாலும் உறுதியாக அவை பெண் வடிவங்கள்தாம். அவை, காலைமூடி உடை அணிந்துள்ளன. இடக்கையில் ஆறு இதழ்களுடைய மலரையும், ஒரு கிளியையும் அவை வைத்துள்ளன. உருவங்களின் கீழே தலைகீழாக இரண்டு கிளி உருவங்கள் உள்ளன, நான்காவது உருவம் முதல் உருவத்தையே ஒத்துள்ளது. ஆனால், ஒரே ஒரு வேறுபாடு அதன் தலையருகில். ஒரு சக்கரம் (சிரசுச்சக்கரம்) உள்ளது.