பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 சான்றுகள் தேவை. அவ்விதச் சான்றுகள் இன்று கிடைக்கவில்ல்ை. ஆனால், ஹாரப்பா முத்திரையில் உள்ள வேலன் வழிப்ாட்டு ஊகத்தை, தமிழ்நாட்டுச் சங்க இலக்கியச் சான்றுகளோடும், தற்கால வேலன் ட்டத்தோடும் பொருத்தச் சான்றுகள் கிடைக் கின்றன்விா என்று ஆராய்தல் வேண்டும். —uខ្លឹមៅ. வேலன் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படும் பூசாரி என்று கருதலாம். காதல் வயப்பட்ட தலைவியிட இருந்து கெட்ட தேவதைகளை விரட்ட அவன் அமர்த்தப் பட்டான். களவியலில் தலைவனோடு உறவு கொண்ட தைைகி, அத்தலைவனுக்காக ஏங்கித் துயருற்றுப் பசலை எய்தும் பொழுது அவளுடைய அன்னை கவலையுதுகிறாள்; தன் மகளைப் பீடித்துள்ள கெட்ட தேவதையை விரட்ட அவன் வேலனை அழைக்கிறாள். வேலன் அக்கெட்ட தேவதைகளை விரட்ட முருகனை வழிபடுகிறான். முருகனுக்கு ஒர் ஆட்டைப் பலியாகக் கொடுக்கிறான். முருகனது பெயரை உச்சரித்து மந்திரம் சொல்லுகிறான். தரையில் களம் ஒன்றமைத்து அக்களத்தில் ஆட்டின் இரத்தத்தைத் தெளிக்கிறான். வேலனது வெறியாட்டத் தோடு பெரும்பாலும் இச்சடங்கு முடிவடைகிறது. சங்கத் தொகை நூல்களில் காணப்படும் பல பாடல்களில் கூறப் பட்டுள்ளபடி இவ்வெறியாட்டமே மிக முக்கியமான சடங் காகக் காணப்படுகிறது. இத்தொகை நூல்களைக் காட்டிலும் காலத்தால் பிந்தியவையாகிய திருமுருகாற்றுப் படை, கல்லாடம் ஆகியவற்றில் வேலனது வெறியாடலைப் பற்றி இன்னும் சற்று விரிவான வருணனை காணப்படு கிறது. தமிழ் நாட்டில் இந்த வெறியாட்டம் மறைந்து விட்டது. ஆனால் கேரளத்தில், வட மலபாரில் திரை பாட்டம், அல்லது பேயாட்டம் என்ற பெயரிலும், மதுபாரில் வேலன் பூசைகளிலும் சிற்சில மாற்றங்களுடன் இந்தப் பண்டைய வழிபாடு இன்றும் நாட்டு வழக்கில்