பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 (j அவ்வுருவம் ஆணா பெண்ணா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்நான்கு உருவங்களும் இருவகைத் தெய்வங்களைக் குறிப்பிடுகின்றன. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட பாவாடை ஒன்று 'சாமி பாவாடை என்று பெயர் பெற்று அவர்களிடையே உள்ளது. நரிக்குறவப் பெண்கள் சாமி மூட்டையைத் தொடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அத்துடன் ஒரு பிரிவைச் சார்ந்த வர்களின் சாமி மூட்டையை அடுத்த பிரிவைச் சார்ந்த வர்கள் தொடக் கூடாது. அடுத்தவர்களுக்கு அவர்கள் தங்கள் சாமி மூட்டையைப் பிரித்துக் காட்ட விரும்பு வதில்லை. வழிபாடு செய்யும் பொழுது குடும்பத் தலைவன் தன் தலையை விரித்துப் போட்டுக் கொண்டு சாமி மூட்டை பைத் திறப்பான். பின்னர் இரத்தம் தோய்ந்த பாவாடையை அணிந்து கொண்டு, வெள்ளி உருவங்களை முக்கோண வடிவமான சிறிய மெத்தைகளுள் பொருத்து வான். இம் மெத்தைகள் திறக்கப்பட்ட சாமி மூட்டையின் மீது வைக்கப்படும். பூவும், குங்குமமும், மஞ்சள் தாளும் தேவதைகளின் முன் படைக்கப்படும். பலி கொடுத்த மிருகத்தின் இரத்தமும் தேவதைகளின் முன்னர்ப் படைக்கப்படும். குடும்பத்தின் தலைவன் தேவதைகளின் முன்னர் நடனமாடிக் கொண்டு அந்த இரத்தத்தில் புரள்வான். ஒரு குடும்பத்தில் மகன் மணம் புரிந்து கொண்டால் தகப்பனின் சாமி மூட்டையில் ஒரு பகுதி அவனுக்குக் கொடுக்கப்படும். மிகவும் பழைய தான துணியானது அவனது சாமி மூட்டையில் வைக்கப் பட்டுப் பின்னர் அவனது தந்தையிடம் கொடுக்கப்படும். குடும்பத்தில் மூத்த மகன் தந்தையினுடைய சாமிமூட்டைக்கு வாரிசாகக் கருதப்படுகிறான். எனவே, அவனது சாமி மூட்டையில் உள்ள இரத்தம் தோய்ந்த துணி ஏழு அல்லது எட்டுத் தலைமுறைகள் கடந்த மிகப் பழைய துணியாக இருக்கும். எப்பொழுதெல்லாம் பூசை நடத்துகிறார்களோ அப். பொழுதெல்லாம் உறவின்ர்களையும், கோத்திரக்காரர்களை