பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

夏翰盛 யும் (தந்தைவழி உறவினர்கள்) அழைத்து அவர்களுக்குத் தலைக்கு ஐந்து ரூபாயும், சம்பந்திகளுக்கு இரண்டு ரூபாயும் அன்பனிப்பாகக் கொடுப்பார்கள். வேறு சில சடங்குகள் ஆணாயினும் பெண்ணாயினும், குழந்தை பிறந்த ஐந்தாம் நாளன்று, குழந்தையின் தலைமுடி எடுத்து அதற்குப் பெயரிடுவர். ஆண் குழந்தையாயின், அது பிறந்த, கிராமம் அல்லது நகரின் பெயரே அதற்கு இடப்படுகிறது. உதாரணமாக நெல்லூர் சிங் அல்லது குண்டுர் சிங் என்ற பெயர்களைச் சொல்லலாம். பெண்கள் மட்டும் அவித்த அரிசி, கருப்பட்டி, நெய் இவற்றாலான விருந்து கொள் கின்றனர். மாங்கனி என்ற பெயருடைய ஆடை ஆபரணங்கள் முதல் தாளன்றே மணப்பெண்ணுக்குக் கொண்டு வரப்படு கின்றன. அன்றே, மணமகனும் மணமகளும் ஒருவருக் கொருவர் மஞ்சளில் தோய்ந்த கங்கணத்தைக் கட்டிக் கொள்கின்றனர். மணமகன் மணமகளின் அகத்தாருக்குப் பரிசத் தொகை கொடுக்கிறான். உறவினர்க்கும் விருந்திடு கிறான். இன்றைக்கு, அப்பரிசத்தொகை சுமார் ஐந்நூறு ரூபாயாகும். எல்லாருக்கும் வெற்றிலையோடு தட்கதினை அளிக்கப்படுகிறது. கருகமணி கோத்த மஞ்சள் நூலாலான தாலியை, மணமகன் மாலையில் பெண்ணுக்கு அணிவிப் பான். கல்யாண நாளன்று பிறிதொரு கருகமணித் தாலியை அவனே மணப்பெண்ணுக்குக் கட்டுவான்.இச்சடங்குகளெல் லாம் மணமகன் இல்லத்திலேயே நடைபெறும். இவர்கள் வழக்கமாகப் புழுங்கலரிசி உண்பினும், விழா நாளிலும் பூஜைநாட்களிலும்பச்சரிசியே உண்கின்றனர் எல்லா நேரத் திலும் குடித்தலென்பது சாதாரண நிகழ்ச்சியே ஆகும். மணமக்களைச் சுற்றிப் பெண்கள் தீபம் சுற்றுகின்றனர். ஒரு வேளை, கண்திருட்டிக் கழிப்புக்காக இதை அவர்கள் செய் கின்றனர் போலும். மறு நாளில் கங்கண விசார்ஜனமென்ற கங்கண அவிழ்ப்புச் சடங்கு நடைபெறும். நீர் நிறைந்த