பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 33 பாத்திரத்தின் எதிரெதிர்ப் பக்கங்களில் ஒருவரை ஒருவர் நோக்குமாறு தம்பதியர் அமர்கின்றனர். மணமகளின் சகோதரன் தண்ணீரினுள் ஒரு சிறிய சுருளுடன் பல மோதிரங்களைப் போடுவான். மணமக்களிருவரும் தண் னிருள் அதனைத் தேடுவர். முதலில் கண்டெடுத்தவரே இதனில் வென்றவராம். இச் சடங்கு எல்லா இந்துக் களிடமும் வழங்கி வருகிறது. பின்னர்த் தம்பதியர் ஒருவருக் கொருவர் இட்லி உண்பிப்பதுண்டு. இதனைத் தொடர்ந்து புனித நீராட்டுண்டு. இத்துடன் சடங்குகள் முற்றுப் பெது கின்றன. இறப்புச் சடங்குகள் இறந்தவரது சடலம் இரவில் வைத்திருக்கப்படுவதில்லை. அன்றே எரிப்பதுதான் வழக்கம், வெள்ளியன்று இறந்தோ ரது சடலத்துடன் கோழிக்குஞ்சு ஒன்றைக் கட்டுவர். இடு காட்டில் அக் குஞ்சை மீண்டும் விட்டுவிடுவர். மலராலும் ஆடையாலும் அலங்களித்த சடலம் மூங்கிற் பாடை மேல் கிடத்தப்படும். மற்றவர் அதனைத் தோளிற் சுமப்பர். உறவினரும் உற்றவரும் பின் வருவர். ஆடலும் பாடலும் பறையடித்தலும், குழலூதலும் உண்டு. புதையற் சடங்கின் பின், எல்லாரும் குளித்துவிட்டுத்தான் விடு திரும்புவர். ஆணாயின் பதினொரு நாளும், பெண்ணாயின் பத்து நாளும் அழுது தீர்ப்பதும் ஒரு சடங்குதான். கருமாதி என்ற இறப்புச் சடங்கு மறுநாளமையும். ஒவ்வொரு குடும்பத்தவரும் தங்களது சாமி மூட்டையை எடுத்துக் கொண்டு ஊருக்கு வெளியே உள்ள ஓரிடத்துக்குச் செல்வர். அரிசியும் காய்கறியும் எல்லாருக்கும் தரப்பட, வெளியிடத்தில் சமையலுண்டு, ஒர் இடத்தினருகில் பல வட்டில்களில் சோறும் சாம்பாரும் வைக்கப்படும், இறந் தோரின் இல்லத்தார் சாமித்தட்டின் மேல் சோறும் , J. பும் மாறி மாறி இடுவர். உறவினர் அவர் பங்கினை இடுத லுண்டு. இறந்தவர் பெயரைச் சொல்லி. இரண்டையும் கலந்து ஒர் உருண்டையாக்கி ஒதுக்கி வைப்பர். இதனை