பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盈伊参 தாயிடமே போட்டு விடுவார்கள். பின்பு நன்கு விரவிய உணவு எல்லாருக்கும் தரப்படும். மீத உணவு வீட்டிற்கு எடுத்துச் செல்லப்படும். வீட்டில் இதனை அவர்கள் உண் பார்கள். சமையலுக்கு உபயோகமான மண்பாண்டங் களை அங்கேயே உடைத்து விடுவர். அந்த வருஷம், பணம் உள்ளபோது தலைத்திவசம் என்ற சடங்குண்டு. ஆதி பலியிட்டு. அனைவரும் விருந்துண்பர். இதன்பின் வேறு சட்ங்கில்லை. - 基@鑿 பணமுள்ளபோது, குலதெய்வத்துக்கு ஒவ்வொரு குடும் பத்தினரும் பூஜையிடுவர். பொதுவாகச் சுமார் ஐந்நூறு ரூபாயாவது செலவாகும். காளிக்காயினும், துர்க்கைக்காயி லும் ஒர் ஆடு பளியிடப்படும். காளி, கள் அல்லது சாராயத் தையே விரும்புவதால், அவற்றில் இரண்டு பாட்டில்கள் அவளுக்குப் படைக்கப்படுகின்றன. துர்க்கை இதனை விரும்புவதில்லை. எனவே, அந்தத் தேவதைக்கு இரண்டு பாட்டில் இஞ்சிச்சாது படைக்கப்படுகிறது. தேவதைகள் ஒரு பை அரிசியையும் பன்னிரண்டு தேங்காய்களையும் ஒரு மணங்கு மாவையும் ஆறு வீசை கருப்பட்டியையும் இரண்டு வீசை எண்ணெயையும் அரை வீசை நெய்யையும் இரண்டு ரூபாய் மதிப்புள்ள கற்பூரத்தையும் வேண்டுகிறார்கள். நிறையப் பூக்களும் தேவைப்படுகின்றன. சம்பந்திகளும் கோத்தரக்காரர்களும் அழைக்கப்பட்டு அவர்களுக்குத் தகதிணை அளிக்கப்படுகிறது. பூஜை வேளைகளில் வழக்க மான ஆடல்பாடலும் மதுவருந்தலும் நடைபெறுகின்றன. பூசாரி தமது சிறிய உருண்டை வடிவமான மணிகளுடன் கூடிய இரத்தம் தோய்ந்த ஆடையே அணிந்துகொள்கிறார். அதன்பின் ஆட்டைப் பலி கொடுத்து அதன் இரத்தத்தைத் தேவதைக்குப் படைக்கின்றார். பின்பு தானும் அதனைக் குடிக்கின்றார். அதன் பின்பு நல்ல விருந்தொன்று நடை பெறுகிறது. -