பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

五むき。 வேறு இரண்டு முக்கியமான பூஜைகளும் இவர்களி டையே நடைபெறுகின்றன. அவை இரண்டும் தற்காலத்தில் வழக்கத்திலிருந்து மறைந்து வருகின்றன. அவற்றிலொன்று: ஏழு பானைகள் பூஜை என்பது. அது அடுத்து விவரிக்கப்படு: கிறது. ஏழு பானைகள் பூஜை இதற்குப் பொருட் செலவும் பொறுமையும் தேவை. மூன்று கற்கள் நிலத்தின் மீது அடுப்பிற்குப் பதிலாக வைக் கப்படுகின்றன. ஒன்றிலிருந்து ஒன்று அளவில் குறைந்த ஏழு பானைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அவற்றில் மிகவும் பெரிய பானை ஒன்று அல்லது ஒன்றரைப்படி அரிசி யைக் கொள்ளும். அவற்றில் மிகவும் சிறிய பானை அரைக் கால்படி அரிசியைக் கொள்ளும், இப்பானைகளில் இடுவதற் குப் பச்சரிசியே பயன்படுத்தப்படுகிறது. சமைப்பதற்காக இப்பச்சரிசி நன்கு கழுவப்பட்டுப் பல்வேறு அளவுகளிலுள்ள பானைகளில் போதுமான நீருடன் இடப்படுகிறது. அடுப்பின் மேல் இப்பானைகள் ஒன்றிற்கு மேல் ஒன்றாகப் பானை களின் அளவின்படி வைக்கப்படுகின்றன. இதனால், மிகவும் சிறிய பானை மேலே அமைகிறது. கீழே நெருப்புப் பற்ற வைக்கப்படுகிறது. இக் குழுவினர் குடித்து விட்டுப் பானை களைச் சுற்றி ஆடிப்பாடுகின்றனர். மேலே உள்ள பானை யில், அரிசி பொங்கி வடியும் வரை இந் நிகழ்ச்சி நீடிக்கிறது. பின்பு, பூசாரி அந்தப் பானையைக் கீழே இறக்கி ஒதுக்கி வைக்கின்றார். அதன்பின் பூசாரி அடுத்த பானையிலுள்ள அரிசியைத் தன் வெறும் விரல்களாலே துளாவுகின்றார். இந்தத் தண்ணீர் கொதித்திருப்பதில்லை. (இவ்வாறு அவர் கள் கூறி நம்புகிறார்கள்) இதனைப் பார்வையாளர்களில் எவரும் தம் விரல்களால் துளாவிப் பரிசோதிக்கலாம். அடுத்து, மேலே இருக்கும் பானையிலுள்ள அரிசி பொங்கி வடியும் வரை மீண்டும் ஆடலும் பாடலும் நீடிக்கின்றன. இதுவும் இறக்கப்பட்டு ஒதுக்கி வைக்கப்படுகிறது. முன் போலவே அடுத்த பானையிலுள்ள அரிசி வெற்று விரல்