பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 06 களால் துளாவப்பட்டு, முன்னர்த் தொடும் பொழுது குளிர்ந்திருந்தது போலவே இப்பொழுதும் உணரப்படுகிறது. மிகவும் பெரிய பானையிலுள்ள அரிசி பொங்கும் வரை இதே நடைமுறை தொடர்கிறது. பிறகு, எல்லாச் சோறும் சாமித்தட்டில் கருப்பட்டி போன்றவற்றுடன் கலக்கப்பட்டு அங்குக் கூடியிருக்கும் எல்லாருக்கும் வினியோகிக்கப்படு கிறது. இம் மக்கள் மேலே கூறியவற்றை உறுதியாக நம்புகிறார்கள். எங்களுக்குத் தகவல் கூறிய பரதேசி, இது போன்ற பூஜையைத் தாம் பார்த்திருப்பதாகவும், ஆனால் அப்பூஜையில் பூசாரியாக இருந்ததில்லை என்றும் கூறினார். பால் பூஜை எனக் கூறப்படும் மற்றொரு பூஜையும் அண்மைக் காலங்களில் கைவிடப்பட்டது. நனைத்த கோதுமை மாவினால் செய்யப்பட்ட பணியாரங்கள், கொதிக்கின்ற எண்ணெய்யில் வேக வைப்பதற்காக இடப் படுகின்றன. பூசாரியோ, பூசையை நடத்தும் குடும்பத் தலைவனோ பணியாரம் வெந்திருக்கிறதா இல்லையா என்ப தைக் காணத் தம் விரல்களை எண்ணையினுள் அமிழ்த்து வார்கள். இது பலமுறை திரும்பத் திரும்பச் செய்யப்படும். மீண்டும் மீண்டும் கொதிக்கும் எண்ணெய்யில் அமிழ்த்தினா லும் அவனுடைய விரல்கள் புண்ணாகிவிடுவதில்லை. அறிவுத் திறமை பெரும்பாலான நரிக்குறவரினத்தைச் சேர்ந்த குழந்தை கள், இங்குள்ள மற்றக் கிராமக் குழந்தைகளுடன் பள்ளிக் கூடம் செல்கிறார்கள், இவ்விரு வகைகளிலிருந்தும் 17 Sy5FP54; 5# G75!? (355’s G&#5 (Goddard Forrr: BGård) பரீட்சையை நடத்தினோம். இவ்வகைத் தேர்வில் அவர்கள் குறிப்பிட்ட வடிவமைந்த உருவங்களைச் சேர்த்து, அதற் காக முறைப்படுத்திச் செதுக்கப்பட்டிருந்த மற்றொரு வடி வத்தில் பொருத்த வேண்டும். ஒவ்வொரு குழந்தையும் மும் முறை இத் தேர்வில் பரிசோதிக்கப்படுவர். இதனைச் செய்து முடிக்க அவர்கள் எடுத்துக் கொண்ட குறைந்த