பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருளப்பள்ளர் என்ற வெட்டக்காட இருளர் ஆர். பெரியாழ்வார், எம்.ஏ. (இருளப்பள்ளர் தமிழ்ப் பழங்குடி மக்கள். மொத்தம் 79,835 பேர்கள் இப்பழங்குடியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருளரினின்றும் வேறு பட்டவர்கள். இனப்பண்புகளில் வேறுபட்டாலும் மொழியில் மிகவும் ஒன்றுபட்டவர்களாக உள்ள னர். இவர்களது மொழியினைப் பற்றிய ஆராய்ச்சி யால் பழங்காலப் பேச்சுத் தமிழின் உருவத்தை அறிய முடிகிறது. இவர்களது பழக்கவழக்கங்களும், சடங்காசாரங்களும், வழிபாட்டு முறைகளும், பழந்தமிழர் பண்பாட்டுக் கூறுகளோடு ஒப்பிடத் தக்கவை. இலக்கியச் சான்றுகளையும், தற்கால மானிடவியல் சான்றுகளையும் ஒப்பிட்டு ஆராய்ந் தால், பண்டைத் தமிழ் மக்களில் உழைக்கும் பகுதியினரது வாழ்க்கை முறையைப் பற்றி அறிய முடியும். இவர்களது தெய்வங்கள், ஆணாதிக்க சமுதாய வாழ்க்கையின் வழித் தேர்ன்றல்கள் ஆவார்கள். பழங்குடி மக்கள் பல மாவட்டங்களில் பரவி வாழ்ந்தபோதிலும், பண்பாட்டுக் கூறுகளில் பழமையை இன்னும் பாதுகாத்து வருகிறார்கள். அவர்களது திருமணச் சடங்குகள், ಟ್ಯಕ್ಟಿ சடங்குகள், கல்நாட்டும் சடங்குகள் முதலியன வற்றிலிருந்து அவர்களது ஆன்மிக நம்பிக்கை களையும், அவற்றிலிருந்து அவர்களது பண்பாட்டு வரலாற்றையும் அறிய முடியும். இக் கட்டுரையின் நோக்கம் அவர்களது குழு வாழ்க்கை வருண GosyGay. (Ethnogrphic description) @Lifluorosurrff தமது நேர்முக ஆய்வில் கண்ட சான்றுகளை, முன்னர் இப் பழங்குடி மக்களை ஆராய்ந்த ஆய்வாளர்களது நூல்களில் காணப்படும் முடிவு களோடு இணைத்தும், வேறுபட்டும் எழுதி யுள்ளார். இது ஒரு மூல ஆய்வுக் கட்டுரை. - -பதிப்பாசிரியர், !