பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 1 () இன்று இந்திய நாட்டில் ஏறத்தாழ மூன்று கோடிக்கும் :ன பழங்குடிமக்கள் வாழ்கின்றனர். இவர்களை ங்களாகப் பகுக்கின்றனர். இவ்வினங்களில் சில, ளையே கொண்டுள்ளன. இன்னும் சில, பல ஆயிரம் மக்களைக் கொண்டவை. தமிழகத்தைப் பொறுத்த மட்டில் 23 பழங்குடியினர் வாழ்வதாக 1961 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணிப்புக் கூறுகிறது. இருளப் பழங்குடி தமிழகத்தில் வாழும் பல்வேறு பழங்குடியினரில் ஒரு ார். இவர்கள் எந்த இனத்தைச் (race) சேர்ந்தவர் ன்பதைப் பற்றி மானிடவியல் அறிஞர்கள் பல்வேறு

க் கொண்டுள்ளனர்.

ருளர் பற்றி மானிடவியல் அறிஞர் கூற்று இந்தியாவுக்குள் நுழைந்த மிகப் பழமையான மனித இனம் நீக்ரோ இனமாகும். இவ்வினம் ஆப்பிரிக்காவி விருத்து புறப்பட்டு அரேபியா,ஈரான் நெய்தல் நிலப்பகுதி கள் வழியாக மேற்கு இந்தியாவிலும் வந்து குடியேறி, பிறகு அங்கிருந்து வட இந்தியாவை நோக்கிப் படர்ந்து மலேயா, பிலிப்பைன்ஸ், நியூகினியா ஆகிய இந்தோனேஷியத் தீவு களில் சென்று தழைத்தது. இந்தியாவைப் பொறுத்தவரை நீக்ரோ இனத்தவர்கள், பின்னர் வந்த வேறு இனத்தைச் சார்ந்த மக்களால் அழிக்கப் பட்டிருக்க வேண்டும் அல்லது புதிய இனத்தவர்களுடன் நீக்ரோ இனத்தினர் ஒன்றிப் போயிருக்க வேண்டும். தமிழ்க் கிளை மொழிகளைப்பேசும் சில தென்னிந்தியப் பழங்குடிகளிடையே நீக்ரோக்களுக்கே உரிய பதிவுகளைக் காணலாம். காடுகளில் உறையும் இருளர், காடர், குறும்பர். பளியர் ஆகிய பழங்குடி மக்களிடையே நீக்ரோக்களின் சாயல் காணப்படுவதால் தக்கானத்திலும் தென்னிந்தியாவிலும் நீக்ரோ இனம் தேங்கிப்படிந்திருப் பதைத் தெளிவாக உணரலாம். இருளர்கள் பளியர்கள் மற்றும் எண்ணற்ற இந்தியப் பழங்குடிகள் தொல் ஆஸ்திர லாபீடு மனித இனப் பிரிவுடன் தொடர்புடையவர்களாகக் கொள்ளலாம் என்று பேராசிரியர் மஜூம்தார் கூறுகிறார்.