பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 இருப்பது வியப்பூட்டுவதாக உள்ளது. களம் அமைப் பதிலும், இரத்த பலியிலும், வேலன் அணியும் ஆடை களிலும், வழிபாட்டு முறையிலுள்ள சில விவரங்களிலும் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. சங்ககாலத் தமிழகத்தில் நிகழ்ந்து வந்த வேலனாட்டத்தின் எச்சமாகக் கேரளத்தில் இன்றும் நடைபெறும் இக்கிராமிய வழிபாடுகள் உள்ளன என்ற முடிவுக்கு ஐயத்துக்கு இடமின்றி வர முடிகின்றது. திரையாட்டம் என்னும் நாட்டு நடனம் வட மலபாரில் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. சாதாரணமாசப் பேயாட்டம் என்று இதை அழைக்கிறார்கள். தெற்குக் கர்னாடகத்திலும், இலங்கையிலும் உள்ள இது போன்ற ஆட்டங்களோடு இது தொடர்புடையது. கோலம்’ என்றும் இதற்கு வேறோர் பெயருண்டு. கெட்ட தெய்வங்களையும் தென்புலத்தாரையும், சிறு தெய்வங்களையும் வழிபடுவதற் காகவே பெரும்பாலும் இவ்வாட்டம் ஆடப்படுகிறது. ஒவ்வொரு ஆட்டமும் ஒரு தெய்வத்தைக் குறிக்கிறது. அத் தெய்வங்கள் கடிவனுரர் வீரன், கேத்திர பாலன் போன்ற புகழ் பெற்ற வீரர்களாகவும் இருக்கலாம்; அல்லது விஷ்ணு முர்த்தி போன்ற இந்து மதப் பெருங் கடவுளாகவும் இருக்க லாம். இத்தகைய தெய்வங்களில் பகவதி மிகப் பிரபலமான தாகும். இத் தெய்வம் வட கேரளத்தில் மிகப் பெருமளவில் வணங்கப்படுகிறது. பகவதியைக் குறித்து நிகழும் ஆட்டங் களில் நாக வழிபாட்டையும் பார்க்கிறோம். இது பகவதி வழிபாடும் நாக வழிபாடும் இணைந்ததைக் காட்டுகிறது. கண்ணகியை நினைவுறுத்தும் அம்சம் எதுவும் இவ்வாட்டத் தில் இல்லை. செம்பரத்தி என்றொரு ஆட்டம் உண்டு. இது, கணவனோடு உடன்கட்டையேறிய ஒரு பத்தினிப் பெண்ணைக் குறித்து நிகழுகிறது. இவ்வாட்டங்கள் நாயர் மற்றும் தியர் ஆகிய சாதியினரின் பரம்பரை வீடுகளில் திகழு கின்றனவென்றாலும், அவ் வட்டாரங்களில் வாழ்கின்ற பெருவண்னான், வேலன், பெருமலையன், . . . . . . மயிலன்போன்ற சாதியினரே அவற்றை நிகழ்த்துகி இந்தச் சாதியினர் இராவிட இனக் குழுக்களைக்