பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | || பேராசிரியர் மஜூம்தார் கருத்தைப் போற்றும் வகையில் எல். ஏ. கிருஷ்ண ஐயர் அவர்கள், “இந்தியா முழுவதும் பரந்து விளங்கிய தொல் ஆஸ்திரலாயிடு மனித இனத்தின் பிரதிநிதிகளாக நீலகிரியில் வாழும் பளியர்களையும் குறும் பர்களையும், ஊராளியர்களையும் இருளர்களையும் கேரளத்தில் உள்ள முதுவர்களையும் குறிப்பிடலாம் என்கி றார்.' மேலே அறிஞர்கள் குறிப்பிடுவது போன்று இருளர் கள், நீக்ரோ இனத்தைச் சார்ந்தவர்களா? ஆஸ்திரலாயிடு இனத்தைச் சார்ந்தவர்களா? என்று இரு வேறுபட்ட கருத் துகள் உள்ளன . தமிழகத்திலுள்ள இருளர்கள் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அண்டை மாநிலங்களான கேர ளத்திலும் மைசூரிலும் உள்ளனர். மைசூர் மாநிலத்தில் இரளிகர் என்னும் பெயரில் அழைக்கப்படுகின்றனர். 1961 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்குப்படி பல்வேறு மாவட் டங்களில் இவர்கள் மக்கள் தொகை பின்வருமாறு: சென்னை 151; செங்கல்பட்டு 24962; வடார்க்காடு 214 1 ; தென்னார்க்காடு 12177; சேலம் 16:41, கோவை 105.98; நீலகரி 4592; மதுரை 8; திருச்சி 2134; தஞ்சை 38; நெல்லை 6: குமரி 87 (76838). இவர்கள் மிகுதியாகக் கோவை, நீலகரி, செங்கல்பட்டு சென்னை, வடார்க்காடு, தென்னார்க்காடு, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ளனர். எங்களுடைய இனவியல் ஆய் cos' Lily. (Ethnographic studies) Gärdo6, soft piń śavāń மாவட்டத்திலுள்ள நீலகிரி குன்றுகளின் கீழ்ச்சரிவில் வாழும் இருளர்கள் தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களில் வாழும் இருளர்களினின்றும் இனத்தால் (Ethnically) வேறுபடுகின் றனர் என்று தெரிகிறது. பொதுவாக, எல்லா மாவட்டங் களிலும் உள்ள இருளர்கள் குட்டையாகவும் கறுப்புநிறம் உடையவர்களாகவும் காணப்பட்டாலும் கோவை, நீலகிரி மாவட்டங்களிலுள்ள இருளர்கள் மூக்கு அமைப் பிலும் சமுதாயப் பழக்கவழக்கங்களிலும் மற்றப் பகுதியில்