பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 உள்ள இருளர்களினின்றும் தனித்து விளங்குகின்றனர். கோவை, நீலகிரி இருளர்களுக்கும் பிற பகுதியிலுள்ள இருளர்களுக்கும் எவ்விதமான சமுதாயத் தொடர்பும் (Social contact) இல்லை என்று தெரிகிறது." 1961 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக் கெடுப்புப் புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4.124.இருள மொழி பேசும் இருளர்கள் உள்ளனர்.தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் 3958 இருளர்களும், கோவை மாவட்டத் தில் 39இருளர்களும் வடார்க்காடு மாவட்டத்தில் 5இருளர் களும், சேலம் மாவட்டத்தில் 18 இருளர்களும் இருள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர்." 1961 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக் கெடுப்புப்படி கோவை மாவட்டத்தில் 84 பேர் இருள மொழி பேசுகின்றனர். ஆனால் அதே ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறையினர் வெளியிட்ட வேறு நூலின்படி 10594 இருளர் உள்ளனர். என் ஆய்வின்போது கோவை மாவட்டத்திலுள்ள அவினாசி, கோவை வட்டங் களில் சுமார் 50-க்கு மேற்பட்ட காட்டுக்குடியிருப்புக்களில் இவர்கள் இருப்பதை அறிந்தேன். இந்த இரு வட்டங்களில் இவர்கள் தொகை சற்றேறத்தாழ பத்தாயிரம் இருக்கும் எனத் தோன்றுகிறது. இவர்கள் அனைவரும் இருள மொழியே பேசுகின்றனர். 84 பேர்தான் இருளமொழி பேசுவர் என்று கொடுக்கப்பட்டுள்ள 1961 மக்கள்தொகை கணக்கு முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒன்றாகத் தோன்றுகிறது. இந்திய மக்கள் கணக்கெடுப்பில் நீலகிரி மாவட்ட இருளர்களும் கோவை மாவட்ட இருளர்களும் இனத்தால் ஒன்று பட்டவர்கள் என்று குறிக்கப்படுகிறது. இந்தக் கூற்று உண்மையே. இந்த இனவியல் நெருக்கத்தைக் கோவை மாவட்ட, நீலகிரி மாவட்ட இருளர்களிடையே உள்ள குலப்பெயர் களின் ஒற்றுமை சுட்டிக் காட்டுகிறது. இவ்விரு பிரிவினருக் கிடையே உள்ள குலப்பெயர்களின் ஒப்புமையைக் கீழே みfr蛮『@s了む。