பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I i 4 பொதுவாக இந்த இரு பிரிவினருக்கிடையே கொள் வினை கொடுப்பினை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அங்குமிங்குமாகச் சில சமயங்களில் சில திருமணங் கள் இவ்விரு.சாதி உட்பிரிவினருக்கிடையே நடைபெறுவதும் உண்டு. ஏன் இவர்களுக்கு இருளப்பள்ளர் அல்லது வெட்டக் காட இருளர் என்று பெயர் வந்தது என்று ஆராய்வதற்கு முன், கோவை மாவட்ட இருளர்களுக்கும் கேரள மாநிலத் தைச் சேர்ந்த அட்டப்பாடி பகுதி இருளர்களுக்கும் உள்ள தொடர்பைக் காண்போம். இருவரும் பெயராலும் இனத் தாலும் ஒன்றுபட்டுள்ளனர் என்பது உண்மையே. அட்டப் பாடி பகுதி இருளர்களும் கோவை மாவட்டத்திலிருந்து குடியேறியவர்கள்தாம் என்ற கூற்றைக் கேரள மாநில மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆய்வாளர்கள் கேரளப் பழங்குடி ஊர்களின் ஆய்வு நூலில் கூறியுள்ள கருத்தைக் காண்டோம். அட்டப்பாடி இருளர்கள் கோவை மாவட்டத்தில் இருந்தவர்கள். பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் அல்லது பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் குடி யேறியதாக வரலாறு கூறுகிறது. விஜயநகரப் போரினால் ஏற்பட்ட குழப்பங்களை அடுத்தும் மனித உயிர்களுக்குப் போதிய பாதுகாப்பு இன்மையாலும், இவர்கள் கோவை யிலிருந்து அட்டப்பாடிக்குக் குடியேறினார்கள் என்று கூறப் படும் காரணம் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே உள்ளது, இருளர்களுடைய முன்னோர்கள் தாங்கள் தொடக்கத்தில் வாழ்ந்த இடத்திலிருந்து பகைவர்களால் பலவந்தமாகத் துரத்தி அடிக்கப்பட்டார்கள் எ ன் று கூறப்படுகிறது. போரின்போது கொள்ளைக்கும் படுகொலைக்கும் ஆளா னார்கள். தாங்கள் வாழ்ந்த இடத்தைவிட்டுக் காடுகளும் வனவிலங்குகளும் நிறைந்த அட்டப்பாடி குன்றுகளைத் தங்கள் புகலிடமாகக் கொண்டனர் இருளர். இவர்கள் குடியேறிய காட்டுப் பகுதிக்குள் துழைவது அத்துணை