பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 1 5 எளியது அல்ல. ஆதலால் அவர்களுக்கு ஆபத்து இல்லை. செவிவழிச் செய்தியாகக் கூடத் தங்கள் பழைய கொடுர மான வரலாற்றையும் போரினால் விளைந்த நாசங்கனை யும் இன்றைய இருளர்கள் அரிதாகவே அறிந்துள்ளனர். ஆயினும் போரின் விளைவால் திகழ்த்த மனமாற்றங்களை யும் புறவாழ்க்கையில் நிகழ்ந்த மாறுதல்களால் ஏற்றுக் கொண்ட பண்பாட்டுக் கூறுகளையும் இன்றும் காணலாம். காட்டாக இன்றும் இருளர்கள் கிணற்றிலிருந்தும் குட்டையி விருந்தும் நீர் பருகுவதைத் தவிர்த்து விடுகின்றனர். அந்த நீர் குடிக்கத்தக்க அளவிற்குத் தூய்மையாக இருந்தாலும், இருளர்கள் அல்லாத, மற்றவர்கள் முன்வந்து அருந்தின: லும் இருளர்கள் மேற்குறித்த இடங்களில் நீரோட்ட மில்லாமல் தேங்கியுள்ள நீரை இன்றும் குடிப்பதில்லை. தேங்கியுள்ள நீர் நச்சுத்தன்மை கலந்துள்ளது என்று நெடுங் காலமாக நம்புவதால் அத்தகைய நீரை அருந்துவதில்லை. இது ஒரு மூடநம்பிக்கையாக இருந்தாலும் இத்தகைய நம்பிக்கை தோன்றுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. விஜயநகர ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற கொரே மான போரின்போது பகைவர்கள் படு தோல்வியையும் பெரும் இன்னல்களையும் மக்களுக்கு விளைவித்தனர். எதிரி களை அடியோடு துடைத்து எறிவதற்குப் பகைவர்கள் கிணறுகளிலும், குளம் குட்டைகளிலும் நஞ்சைக்கலந்து பெருத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடும். தங்கள் உயிர்களுக்கும், தங்கள் நெருங்கிய உற்றார் உறவினரின் உயிர்களுக்கும் இதன் விளைவாக நேர்ந்த முடிவைக் கண்டு அஞ்சி நடுங்கிய இருளர்கள், வேறு வழி யில்லாமல் பின்வாங்கிப் படிப்படியாக அடர்ந்த காடுகள் நிறைந்த அட்டப்பாடியில் வந்து குடியேறினார்கள். யாராலும் அணுக முடியாத காட்டுப்பகுதியில் வந்து குடி யேறிய போதிலும் பகைவர்களின் செயல்கள் அவர்கள் நெஞ்சில் அச்சத்தை உண்டாக்கிக் கொண்டிருந்ததால் இன்றும் அவர்கள் தேங்கிய நீரைப் பருகுவதை விரும்புவ தில்லை. அதன். பின்னர், அட்டப்பாடியில் நீரோடிடமுன்ன