பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 i ö நதிகளிலிருந்தும், கால்வாய்களிலிருந்தும் மட்டுமே இருளர் கள் நீரை அருந்துவது வழக்கமாயிற்று. இந்தக் கட்டுப்பாடு நிலைத்து நிற்கத் தொடங்கியது மட்டும் அல்லாமல் காலப் போக்கில் கடுமையாகவும் அனுசரிக்கப்பட்டது. அதன் விளைவாகத் தேங்கிய நீரைக் குடிப்பது ஒரு செய்யக் கூடிாத தவறாக (Taboo) அமைந்தது. அட்டப்பாடியிலுள்ள இருளர்களில் ஒரு பிரிவினர் கறுப்புச் செம்மறி ஆட்டைக் கொல்வதும் இல்லை. அவற் றின் கறியை உண்பதும் இல்லை. அந்த் வழக்கத்துக்குப் பின் பலமாக உள்ள கதை, இருளர்களுக்குத் தக்க சமயத் தில் உதவிய கறுப்பு ஆடுகளின்மீதுள்ள ஈடுபாட்டைக் காட்டுகிறது. கொடுரமான அழிவுமிக்க போரின்போது அவர்கள் பின்வாங்கிய நிலையில் ஒருநாள் அவர்கள் இரவு உணவை ஒர் ஆற்றங்கரையில் தங்கி உண்டனர். அவர்கள் எடுத்துச் செல்லும் பொருள்களையும் (Movable properties) கால்நடைகளையும் தங்களுடன் கொண்டு சென்றனர். ஆற்றங்கரையில் கால்நடைகளும் கறுப்புச் செம்மறி ஆடு களும் மேச்சலுக்கும் தண்ணிர் குடிப்பதற்கும் அவிழ்த்து விடப்பட்டன. உணவின்றி, நீரின்றி வெகுதூரம் நடந்து வந்த களைப்பு மிகுதியால் இருளர்கள் நித்திரையில் தங்களை மறந்து அயர்ந்திருந்தனர். நள்ளிரவில் அனை வரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது எதிரிகள் நட மாட்டம் மிக அருகில் இருப்பதை உணர்த்துவதுபோல் செம்மறி ஆடுகள் கத்தின. அமைதியான நள்ளிரவில் செம்மறி ஆடுகள் சேர்ந்தாற்போல் கத்தி உறங்கிக் கொண் டிருந்தவர்களை எழுப்பியது. இ. ரு ள ர் க ள் விழித்துக் கொண்டு நோக்கியபோது எதிரிகள் கல் எறியும் தொலை விலிருந்து கள்ளத்தனமாக முன்னேறிக் கொண்டிருந்தனர். எதிரியின் தாக்குதலிலிருந்து இருளர்கள் தப்பி ஓடினார்கள். தங்களிடமிருந்த கறுப்புச் செம்மறி ஆடுகள் மட்டும் கத்தித் தங்களை எழுப்பாமல் இருந்திருந்தால் அவர்கள் எதிரி களுக்குப் பலி ஆகியிருப்பார்கள். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இருளர்கள் கறுப்புச் செம்மறி ஆடுகள் காலத்தால் செய்த