பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 7 உதவியை உணர்ந்து அவற்றின்மீது பற்றும் பாசமும் கொண்டனர். கறுப்புச் செம்மறி ஆட்டைக் கொல்வதும், அதற்குத்தீங்கு விளைவிப்பதும்,அதற்குச் செய்யும் துரோகம் என்று இருளப்பள்ளர்களிடையே ஒரு கருத்து நிலவுகின்றது. இத்தகைய செயல்களை அவர்கள் தவிர்க்கின்றனர். ஆடு களின் மீதுள்ள பற்றையும் பாசத்தையும் அவர்களுக்குப் பின் வந்த சந்ததிகளும் பாதுகாத்து வருகின்றனர். --- இருளர்கள் விஜயநகரப்போரின் விளைவால் குடி பெயர்ந்து இப்போது இருக்கும் இடத்திற்குக் குடியேறி யிருக்க வேண்டும் என்ற கருத்தை மேலே குறிப்பிட்ட கதை களும் வேறு சில வரலாற்றுச் சான்றுகளும் வலியுறுத்துவன வாக அமைகின்றன." இருளப்பள்ளர் நீலகிரி மாவட்டத்திலுள்ள இருளர்கள் எலியை உண்ட தில்லை. ஆனால், கோவை மாவட்ட இருளர் எலியை உண்கின்றனர். பள்ளர் என்ற தாழ்த்தப்பட்ட சாதியினர் எலியை உண்பது நாம் அறிந்த ஒன்றாகும். தாழ்த்தப்பட்ட பள்ளர் சாதியினர் போன்று கோவை மாவட்ட இருளர் களாகிய இவர்களும் எலியை உண்பதாலும், இவர்கள் இருளப்பள்ளர் என்று அழைக்கப்படுகின்றனர். இருளர்கள் தம்மை உயர்ந்த இனத்தவராகவும் இருளப்பள்ளரைத் தாழ்ந்த இனத்தவராகவும் கருதுகின்றனர். இருளரும் இருளப்பள்ளரும் திருமணச் சடங்கு, பூப்புவிழா, ஈமச் சடங்கு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் போதும், சமுதா யப் பழக்கவழக்கங்களிலும் வெவ்வேறு நடைமுறைகளை மேற்கொள்கின்றனர். இருளர்கள் பேசும்மொழி இருளப் பள்ளர் பேசும் மொழியினின்றும் ஒன்றுபட்டும், இேறு பட்டும் காணப்படுகின்றது. ஏன், ஆப் பூேரது கண்ட கோவை மாவட்ட இருளப்பள் r - வழக்கங்களையும் வாழ்க்கையின் பல்ே பார்ப்போம்.