பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I | 8 கோவை மாவட்டத்தில் இருளப்பள்ளர் அவினாசி, கோவை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி வட்டங்களி லுள்ள காடுகளிலும் சிறுவாணி, பாலமலை, மருதமலை, வெள்ளியங்கிரிமலை போன்ற மலைப் பகுதிகளிலும் வாழ் கின்றனர். இம்மாவட்டத்தில் வாழும் சுமார் 10,548 இருளப்பள்ளரில் கோவை, அவினாசி வட்டங்களில் மட்டும் 998 பேருக்கு மேல் வாழ்வதாக 1981 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மூலம் தெரிகிறது. இவ்விரு வட்டங்களில் சுமார் 80-க்கு மேற்பட்ட காட்டுக் gigajority asfié (Forest settlements, a.sffairsoft. g|Gerto பள்ளர் வாழும் காட்டுக் குடியிருப்புப் பகுதிகளுக்குப் "பதி' என்று பெயர். ஒவ்வொரு பதியிலும் 10 முத்ல் : அல்லது 30 வீடுகள் உள்ளன. பெரும்பாலான பதிகள் கடல் மட்டத்திலிருந்து 1000 அடி முதல் 2000 அடிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ளன. சிங்கப்பதி, பொட்டப்பதி, சாடிவயல், ஜாகீர்பதி, கல்கொத்திப்பதி, சர்க்கார்பதி, தானிகண்டி, அட்டுக்கல், கொரவன்கண்டி, தோண்டை, பெருக்கப்பதி, பறையன் கோம்பை, நெல்லி மரத்தார், மானார் சிறுகிணறு குண்டுர், பூச்சமரத்துரர், சொரண்டி, கோடியூர், சேத்துமடுவு, மாங்குழி, பூலப்பதி, செங் குட்டை, பெரும்பதி, குஞ்சூர்பதி, மருதன்பரைப்பதி, அரக்கடவு, பரணி, மேல்பில்லுர், சித்துக்கணி, வீரக்கல், ஊஞ்சலரக்கோம்பை, நீராணி,கடம்பன் கோம்பை, வேப்ப மரத்துரர், கண்டப்பட்டி, கோரப்பதி, கெத்தைக்காடு, மூல செங்கால்பதி, மணியரசன்குட்டை, பசுமணி, உப்புப் பள்ளம், மரிக்கோடு, கீழபில்லூர், அரியூர், உளியூர், போத்தம்படிகை, ஊக்காப்படிகை, நீலம்பதி, மொட் டியூர், ஊக்காயனூர், மேல்பாவிப்புதுரர், ஆனைப்பதி, செங்கல், சுண்டப்பட்டி, குழிவெளாமுண்டி, செங்குட்டை, வெளாமுண்டி, ஆலாங்கண்டி, ஆலாங்கண்டி புது?ர், கோப னாரி முதலிய ஊர்களில் இவர்கள் வாழ்கிறார்கள்.