பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 1 & பதிகளின் பெயர்க்காரணம் இந்தப் பதிகளின் பெயர்கள் இயற்கைப் பொருள்களின் பெயர்களாகவும், காரணப் பெயர்களாகவும் அமைந்துள் ளன. காட்டாக, அவினாசி வட்டத்திலுள்ள தோளம் பாளையம் கிராமத்திலுள்ள பதிகளை மட்டும் ஆய்வோம். போத்தம்படுகை என்ற பதி போத்தன் என்ற இருளப்பள்ள னால் படுகைமண் கட்டப்பட்டது. ஐக்கப்பட்டி, ஊக்கான் என்பவனால் உண்டாக்கப்பட்ட பதியாகும். கீல்ைபதி, மோட் டியூர், ஊக்காவனுரச், முறையே நீலன், மொட்டியன், ஊக்கான் என்ற இருளப்பள்ளர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. பூனைப்பதி பூளை என்ற ஒருவகைச் செடி மிகுதியாக அந்தப் பதி இருக்கும் இடத்தில் இருந்ததால் பூளைப்பதி என்றழைக்கப்படுகிறது. மேல்பாவிப்புதூர் மேல் பாவி என்றால் மேல்பகுதி கிணறு என்று அவர்கள் மொழியில் பொருள்படும். இந்தப் பதியில் மேல்பாவி என்று ஒரு கிணறு இருப்பதால் இந்தப் பதிக்கு இப்பெயர் வர லாயிற்று. குழிவெளாமூண்டி ஒரு குழியில் விளாமரம் இருக் கிறது. மூன்று பக்கங்களிலும் மலைச்சரிவுகளில் கிண்ணம் போன்ற பகுதியில் உள்ளது. அந்த மலைச்சரிவுகளிலுள்ள கிண்ணம் போன்ற பகுதிக்கு உண்டி என்ற பெயர். அத னால் இந்தப்பதி குழிவிளாமுண்டி என்ற பெயரில் வழங்க லாயிற்று. செங்குட்டைவெணாமூண்டி செம்மண் தண்ணீர் குட்டையில் விளாமரம் உண்டி பகுதியில் அமைந்துள்ளதால் இந்தப் பதிக்கு இப்பெயர் வரலாயிற்று. சீங்குளி என்ற பதி யில் சீங்கை என்ற செடி மிகுதியாக இருந்ததாலும் அப்பதி குழிப்பகுதியில் அமைந்ததாலும் சீங்குளி என ஆயிற்று. கண்டி என்றால் இவர்கள் மொழியில் இரண்டு மலைகளும் சேரும் கணவாய் போன்ற இடைவெளிக்குப் பெயர். அந்தக் கண்டியில் ஆலமரங்கள் மிகுதியாக இருந்ததை ஒட்டி அப்பதி அமைந்ததால் ஆலங்கண்டி என்றும், அதை யொட்டிப் புதிதாக அமைந்த பதிக்கு ஆலங்கண்டிபுதூர் என்றும் பெயர்கள் பெற்றன. கோப்பை என்ற செடி தல்ல நறுமணத்தை உடையது. அதை மனிதர்கள் தலைக்குத்