பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 2 3 களில் (Forest settlements) வீடுகள் கட்டிக் கொடுத்துள்ள இரர். தொழில் அவினாசி வட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் பகுதியி லுள்ள இருளப்பள்ளர்களில் பலரும் பாக்குத் தோப்பு களைக் காவல் காத்துக் கொண்டு அவற்றுக்குத் தண்ணீர் பாய்ச்சும் கூவிகளாக உள்ளனர். கோவை மாவட்ட வனத்துறை காட்டுக் குடியிருப்புகளில் வாழும் பெரும்பாலான இருளப்பள்ளர்களுக்கு ஒதுக்கப் பட்ட காடுகளில் (Reserved forests) காட்டு நிலத்தைப் பயிரிடக் கொடுத்துள்ளனர்.அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தில் சாமை, தினை போன்ற சிறு தானியங்களைப் பயிரிடுகின்றனர். காடுகளில் உள்ள மூன்றாம் தர தடிமரம், விறகு, மூங்கில், புற்கள் ஆகியவற்றைச் சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ள அரசினரால் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கால்நடைகளை (வெள்ளாடு கள் தவிர) இலவசமாகக் காட்டில் மேய்த்துக் கொள்ள அனுமதிக்கின்றனர். குடியிருப்புப் பகுதி (Settle ாents)க் காடுகளில் உள்ள சில்லறை வனப்பொருள்களை இருளப்பள்ளர் தங்கள் சொந்த உபயோகத்திற்குப் பயன் படுத்த அனுமதிக்கிறார்கள். காடுகளில் உள்ள வேலை களான சந்தனமரம் வெட்டுதல், மற்றும் இதர வேலைகளை வனத்துறையிடமிருந்து நிர்ணயிக்கப்பட்ட விகிதங்களில் கூலி பெற்று வேலை செய்து வருகின்றனர். மேலும், விறகு வெட்டும் வேலையையும், கூப்பு வெட்டும் வேலையையும் வனக் குத்தகைக்காரர்களிடம் கூவி பெற்றுச் செய்து வரு கின்றனர். சில்லறை வனப்பொருள்களைச் சேகரிக்கும் வேலைகளையும் குத்தகைக்காரர்களிடமிருந்து கலி பெற்றுச் செய்து வருகின்றனர். இதைத் தவிரச் சிலர் பில்லுனர், நெல்வித்துறை மின்சார அணைக்கட்டுப் பணி களில் ஈடுபட்டும் பயிர்த்தொழில் செய்யும் விவசாயக் கூலி களாகவும் உள்ளனர். பாக்குத் தோப்புகளையும், மூங்கிலை