பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

運認5 பற்றித் திட்டவட்டமாக எனது ஆய்வின் மூடிவில் ஒருசொறு: கூறமுடியும்". இலக்கியமும் இசையும் இவர்கள் இலக்கியம் ஏட்டில் ஏறாத நாட்டுக் கதை களும் நாட்டுப் பாடல்களும் ஆகும். இருளர்களைப் போன்று இருளப்பள்ளர்களும் இசை இன் பத்திலும் மிகுதி யாக ஈடுபாடு கொண்டுள்ளனர். இவர்கள் பல்வேறு வகை யான நாட்டுப்பாடல்களை அறிந்துள்ளனர். பல்வேறு விழாக்களில் இவர்கள் பாடல்களைப்பாடி மகிழ்வெய்து கின்றனர். விழாக்களிலும் சடங்குகளிலும் இசைக்கருவி களை இசைத்து அதற்கேற்ப ஆட்டங்கள் ஆடியும் பாட்டு கள் பாடியும் மகிழ்வெய்துகின்றனர். இருளப்பள்ளர் பொரெ, தப்பட்டெ, நாகசுர, குவாலு, பங்கெ போன்ற இசைக்கருவிகளைக் கொண்டுள்ளனர். இவர்களிடம் இருளர்களிடம் இல்லாத ஒர் இசைக்கருவி உள்ளது. இது ஒரு துளைக்கருவி. இதன் பெயர் 'மங்கெ என்று இவர் களால் கூறப்படுகிறது. இது ஒரடி நீளமுள்ள புல்லாங்குழல் போன்ற ஒரு மூங்கில் தண்டு, இந்த மங்கெ என்ற இசைக் கருவியில் புல்லாங்குழலின் பக்க வாட்டில் துளைகள் இருப்பதுபோன்று இதில் இல்லை கல்வி அரசினர் இவர்களுக்கெனத் தனியாகப் பழங்குடிப் பள்ளிகள் அமைத்துக் கொடுத்துள்ளனர். இருப்பினும், இருளப் பள்ளரில் மிகச் சிலரே பள்ளிக்குச் செல்கின்றனர். காட்டாக, நெல்லித்துறைக் கிராமத்தில் ஒன்பது காட்டிருப்புகளில் இவர்கள் குடியிருக்கின்றனர். ஆனால், அங்குள்ள ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் இருளப்பள்ளர் இனத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன்கூட இப்பொழுது படிக்க வில்லை என்பது மிகமிக வியக்கத்தக்கது. பெரும்பாலான பதிகள் காட்டுக் குடியிருப்புப் பகுதிகளில் இருப்பதாலும்,