பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 26 ஏத்மை காரணமாகவும் இவர்களுக்குப் படிப்பின்மீது நாட்டமில்லை. இருளப்பள்ளர் 99 சதவீத மக்கள் கல்வி அறிவில்லாதவர்கள். மருத்துவம் டாக்டர். எஸ். நரசிம்மன் அவர்கள், பல ஆண்டு கனாகக் கோவை, அவினாசி வட்டங்களில் பதிகளுக்குக் காரில் சென்று இலவச மருத்துவப் பணிபுரிகிறார். நீலகிரி ஆதிவாசி நலச்சங்கத்தின் மூலமாக கோலிக்கரையிலும், அரைஆசிலும் நிறுவப்பட்ட இலவச மருத்துவமனைகளில் மருத்துவ உதவி பெறுகின்றனர். இந்த மருத்துவமனைகள் இருளருக்கும், இருளப்பள்ளருக்கும் மற்றப் பழங்குடி மக்களுக்கும் மருத்துவ உதவி புரிவதோடு இருளரையும் இருளப்பள்ளரையும் இணைக்கும் கலாசாரப் பாலமாக அமைகிறது. இரண்டு பிரிவினருக்குமிடையே பொதுவாகத் திருமண உறவு ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், சில சமயங்களில் இதற்கு விதிவிலக்காக ஒரிரு திருமணங்கள் நடந்துள்ளன. மருத்துவமனைகளில் இருளரும், இருளப் பள்ளரும் இணைந்து பழக வாய்ப்பு ஏற்படுகின்றது. இவ்வாறு இணைந்து பழகுதல் இத்தகைய திருமணங்கள் நிகழ ஒரு காரணமாக அமைகிறது. - பழக்க வழக்கங்கள் இருளப்பள்ளரிடம் வெற்றிலைப்போடும் பழக்கமும் சாராயம் குடிக்கும் பழக்கமும் உண்டு. இருளப்பள்ளப் பெண் கள் காதோலை, மயிர்மத்தி, பாசிமணி, சங்கிலி, வெள்ளி மணி, மூக்குப்பொட்டு, வளையல், காப்பு, மிஞ்சி போன்ற அணிகலன்களை அணிகிறார்கள். இருளப்பள்ளப் பெண்கள் தோளில் பச்சைக் குத்திக் கொள்கிறார்கள். இருளப்பள்ளர் வாழும் ஒவ்வொரு பதிக்கும் ஒரு தலைவன் உண்டு. அப் பதிக்குரிய தலைவனை மூப்பன்' என்றழைக்கிறார்கள். அத் தலைவன் மூப்பன்' என்று ஏன் பெயர் பெற்றான் என்பது