பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

星多Y தெளிவாகத் தெரியவில்லை. பதித்தலைவனாகிய மூப்பன்' பூப்புவிழா, திருமணவிழா, ஈமச் சடங்கு போன்ற பல்வேறு சடங்குகளையும், விழாக்களையும் முன்னின்று நடத்தி வைப்பதோடு மண முறிவு வழக்குகளையும், சிறுசண்டை சச்சரவுகளையும் தீர்த்து வைக்கிறான். பதியிலுள்ள இருளப் பள்ளர் அனைவரும் பதித் தலைவனாகிய மூப்பனுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பதோடு கட்டுப்பட்டும் தடக்கிறார்கள். பொதுவாக, பதிகளிலுள்ள இருளப்பள்ளர் அனைவரும் ஒருங்கிணைந்து வாழ்கின்றனர்.இருளப்பள்ளர் இனத்தில் ஆண், பெண் இடையே ஓரளவு சம அந்தஸ்து உள்ளது. இயல்பாகவே இவர்கள் சோம்பேறிகளாகவும் உடலுழைப்பிற்குத் தயக்க முடையவர்களாகவும் இருக் கிறார்கள். மிகவும் நாணம் உடையவர்களாகவும், தமிழ் மக்களுடனும் மற்றவர்களுடனும் பழகுவதற்கு அஞ்சுடவர் களாகவும் உள்ளனர். காடுகளில் கொடிய விலங்குகளைக் கானும் பொழுது மிகவும் தைரியமுள்ளவர்களாகவும் அவற்றைச் சமாளிக்கும் திறன் உடையவர்களாகவும் உள்ளனர். சமயமும் வழிபாடும் இருளப்பள்ளர் ஆவி, ஆன்மா ஆகியவற்றில் நம்பிக்கை யுடையவர்கள். பாலமலை ரங்கசாமியையும், காரமடை ரங்கசாமியையும் இவர்கள் வழிபடுகின்றனர். இந்த இரண்டு கோவில்களுக்கும் இருளப்பள்ளர் பூசாரிகளாகவும் உள்ளனர். மாரியம்மன், காளி,சாடி, பத்திரகாளி போன்ற தெய்வங்களையும், திங்கள் ஞாயிறு போன்ற இயற்கைத் தெய்வங்களையும் வழிபடுகின்றனர். மாரியம்மனும், ரங்க சாமியும் இவர்கள் வணங்கும் தலையாய தெய்வங்கள். இத் தெய்வங்களும், இருளரையும் இருளப்பள்ளரையும் இணைக் கும் தெய்வங்களாவதோடு இவ்விரு பிரிவினர் சமுதாயவியல் நெருக்கத்தைக் காட்டுகிறது. காரமடை ரங்கசாமிக்கு நாமம் இடப்பட்டிருந்தாலும் இவர்கள் வைணவம் பற்றிய தத்துவம் அறிந்தவர்களா என்பது ஐயப்பாடே. வீட்டுத்