பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

虚器莎 தெய்வம் என்று குலத்தெய்வத்தைக் கூறுகின்றனர். இத் தெய்வத்திற்கு விழா எடுக்கும்பொழுது குறிப்பிட்டவகைப் பாடலைப் பாடியும், ஆட்டம் ஆடியும் இசைக் கருவிகளை இசைத்தும் மகிழ்வு எய்துகின்றனர். தாம் வழிபடும் சாடி அம்மனைப் பத்திரகாளியாகவே வழிபடுகின்றனர். இவர் கன் வணங்கும் தெய்வங்களுக்கெனக் கோயில் கட்டடங்க ளாக இல்லை. பதியின் கோடியிலோ, மலையில் பெரிய மரங்களின் நிழலிலோ கற்சிலைகளை நட்டு வழிபடுகின்ற னர். சிலவிடங்களில் வெறும் கருங்கற்களைத் தெய்வங்க னாக நட்டு வழிபடுகின்றனர். சில பதிகளில் மேல் கூரை இல்லாத கோயில்கள் உள்ளன. வெள்ளியங்கிரி மன்ல்வி ஒள்ள தெய்வத்தையும் வணங்குகின்றனர். இருளப்பள்ளர் வைகாசி விசாகத்தைச் சிறப்பான விழா நாளாகக் கொண்டாடுகின்றனர். விசாக விழாவில் சாடி அம்மனைக் கொண்டாடுகின்றனர். இவ்விழா எட்டு நாள் கள் நடப்பது வழக்கமாம். சாடி அம்மனை, மண்பானைக் கரகத்தில் வைத்து வழிபடுகின்றனர். வைகாசி விசாகம் கொண்டாடும் முதல் ஏழு நாட்களிலும் கரகத்தோடு மலர் களையும் நெருப்பையும் எடுப்பது இவர்கள் வழக்கம். மலர் களை அணிந்து கையில் நெருப்புச் சட்டி ஏந்தி அந்த ஏழு நாட்களிலும் இவர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுவர். ஏழாவது நாள் இரவு அந்தக் கரகத்தோடும் நெருப்புச்சட்டி யோடும், மண்ணால் செய்யப்பட்டு அழகிய வண்ணங்கள் தீட்டப்பட்ட பல சிலைகளையும் எடுத்துச் செல்வர். மட் குடக் கரகத்தில் உள்ள சாடி அம்மனோடு மண்ணால் செய் யப்பட்ட குதிரை, யானைபோன்ற உருவங்களையும் தல்ை யில்வைத்து ஊர்சுற்றி விழா எடுப்பர். சில பதிகளில் மட் குடத்தோடு கூடிய சிலைகளை நீர்நிலைகளில் இட்டு, வழி பாட்டினை முடித்துக் கொண்டு, எல்லாரும் ஒன்றாகக்கூடி விருந்துண்பர். இன்னும் சில பதிகளில் மரத்தடியில் கோவிலில் வைத்து வழிபாட்டினை முடித்துக் கொண்டு எல்லாரும் கூடி விருந்துண்டர்.