பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 39 பூப்புவிழவி இருளப்பள்ளர் பெண் பூப்பெய்தியவுடன் தாய் மாமனாவது, தாய்மாமன் மகனாவது, முறை மாப்பிள்ளை யாவது அவள் இருக்கக் குடிசை கட்டிக் கொடுக்கிறான். ஏழாவது நாள் விடியற்காலையில் அந்தக் குடிசையை எரித்து விடுகிறார்கள். பெண் பருவமடைந்ததைக் கொண் டாடும் வகையில் ஒரு சிறு விழா நடத்துவது மரபு. பெண் பூப்பெய்திய மூன்றாவது வாரத்திலாவது மூன்றாவது மாதத்திலாவது இவ் விழா நடைபெறுகிறது. இவ் விழா நடத்தும்பொழுது பூப்பெய்திய பெண்ணின் அருகில் உலக்கை, உரல், பாய், பாட்டில், துடைப்பம், சீப்பு முதலி யன வைக்கப்படும். இப்பொருள்களை இருளப்பள்ளர் ஏன் அப் பெண்ணின் அருகில் வைக்கின்றனர் என்பதற் குரிய காரணம் தெரியவில்லை. இருளர் (நீலகிரி பூப்பு விழா நடத்தும்போழுது இருளப்பன்னரைப் போன்று இப் போருள்களை பருவமடைந்த பெண்ணின் அருகில் வைப்ப தில்லை என்பது ஆதிப்பிடத் தக்கது. பருவமடைந்த இருளப் பள்ளர் பெண் கையில் எண்ணெய் எடுத்து தேய்த்துக் கொள்ளும்பொழுது முறைப் பெண்கள் (மாமன் பெண்கள்) அந்த எண்ணெயைத் தேய்க்கவிடாமல் கையைத் தட்டிவிடு வர். இதே போன்று மும்முறை அப்பெண்ணை எண்ணெய் தேய்க்க விடாமல் கையைத் தட்டிவிடுவர். அந்தப் பெண் உணவு உண்ண கையில் உணவை எடுத்து வாயின் அருகே கொண்டு செல்லும் பொழுது, கையிலுள்ள உணவை மும் முறை தட்டிவிடுவர். பருவமடைந்த பெண் எண்ணெய் தேய்க்கும்போழுதும், உணவு உண்ணும் பொழுதும் அவள் இந்த கையை ஏன் தட்டிவிடுகின்றனர் என்பது தெரிய வில்லை. விழா முடிவடைந்த உடன் எல்லாருக்கும் விருத்து படைக்கின்றனர். இத்துடன் விழாவும் விருந்தும் முடி வடைகின்றன. A 633-9