பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 திருமணம் பெரும்பாலும், ஒருவரை ஒருவர் விரும்பிய ஆடவனும் பெண்ணும் சம்மதித்து மணக்கும் முறையே உள்ளது. பெரியவர்கள் பெண் பார்த்து மணம் முடித்து வைக்கும் வழக்கம் மிகக் குறைவாகவே உள்ளது. இவ்வாறு விருப்பம் உடையவராக மனம் ஒருங்கிணைந்தவராக இருந்தாலும், பெண்ணை மணக்க விரும்பும் ஆடவன் குறைந்தது ஆறு திங்களாவது மனம் நடக்கும்முன் பெண் வீட்டில் அல்லது அவர்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும். மாப்பிள்ளை, பெண்ணின் தாய் தந்தை மனம் உவக்கும் வகையில் நடந்து கொள்ளவேண்டும். அதன் பிறகே பெண்ணை மணம் முடித் துக் கொடுக்கின்றனர். மற்றொரு மனமுறையும் இவர்களி டையே உள்ளது. உள்ளம் ஒருங்கிணைந்த ஆணும் பெண் னும் மணம் செய்து கொள்ளப் பல ஆண்டுகள் ஆகலாம். அவனும் அவளும் கணவன் மனைவியாக வாழ்ந்து குழந்தை கள் பெற்றுக்கொண்டாலும் பெரியவர்கள்முன் முறைப்படி மனம் தடைபெறாவிடில் அவர்கள் தம்பதிகள் ஆக முடி யாது. பல ஆண்டுகள் வாழ்ந்து குழந்தைகளைப் பெற்ற பின் நடைபெறும் மணங்கள் சில உள்ளன. ஒத்து வாழ்ந் தாலும் இறுதிவரையில் கூட மணம் இல்லாமலே இருக்க லாம் போலும். எனினும் மணமின்றி இறத்தலாகாது. இருளப்பள்ளர் இனத்தில் 12 குலங்கள் உள்ளன. குப்டெ, குப்பிளி, உப்பிலி என்னும் இந்த மூன்று குலங் களைச் சேர்ந்தவர்கள், மற்ற ஒன்பது குலங்களில் திருமணம் செய்து கொள்ளலாம். சம்பெ, குறுநகெ, புங்கெ என்னும் இந்த மூன்று குலத்தினர் ஏனைய ஒன்பது குலங்களில் மணம் முடித்துக் கொள்ளலாம். கரிட்டிகெ, பேரதர, ஆறுமுப்பு என்னும் குலத்தினர் மற்ற ஒன்பது குலத்தினரைத் திரு மணம்செய்து கொள்ளலாம். பெரியவர்கள், மூப்பன் ஆகிய வர்களுடன் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டிற்குப் பெண் கேட்கச் செல்லும் பொழுது, கையில் தடியும் குச்சியும் கொண்டு செல்கின்றனர்.