பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 31 இந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள் பெண் கேட்கக் கெல் லும் பொழுது, இன்ன குச்சியைத்தான் கையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்னும் மரபு உள்ளது.சம்பெ, குறுந்கெ, புங்கெ என்னும் குலங்களைச் சார்ந்தவர்கள் புங்கங்குச்சி களை எடுத்துச் செல்லுதல் மரபு. கரிட்டிகெ, பேரதர, ஆறுமுப்பு குலங்களைச் சார்ந்தவர்கள் மூங்கில் குச்சிகளை எடுத்துச் செல்லல் மரபு. வெள்ளை, தெவனெ, கொடுவெ என்னும் குலங்களைச் சார்ந்தவர்கள் பாஸ்கர மரக்குச்சி களை எடுத்துச் செல்கின்றனர். பெண் வீட்டாரிடம் பெண் கேட்கும் பொழுது பெண் வேண்டும் என்று நேரடியாகக் கேட்பதில்லை. பெண்ணை வாழை மரத்திற்கும் நிலத் திற்கும் உருவகப்படுத்தி இருளர் கேட்பது போன்று இருளப் பள்ளரும் பெண்னை வாழை அல்லது வேறு மரப்பெயர் களோடு உருவகப்படுத்திப் பெண் வேண்டும் என்னும் செய்தியை ஒரு பாட்டின்மூலம் வெளிப்படுத்துகின்றனர். 'கிழநாடு கம்புங்க பிலி தென்னாடு தென்னம் பிலி வடநாடு வானெ பிலி மேநாடு மொந்தவாளை பிலி சின்னமொக வாள்ெபிலி வாங்கி போக வந்திருக்கு” பெண்கேட்க வந்திருப்பதை இந்தப் பாடலின் மூல மாகத் தெரிவிக்கிறார்கள். பெண் வீட்டார் பெண் கொடுக்கச் சம்மதித்தால் பெண்ணுக்குப் பரியப் பணமாக ரூபாய் 25- குறிப்பிட்ட நாளில் கட்டப்படுகிறது. அந்தப் பணத்தில் பெண்ணின் தாய்க்கு ரூபாய் 1-25 கொடுக்கப் படுகிறது. பெண்ணின் தாய் மாமனுக்கு ரூபாய் 1-25 கொடுத்தல் மரபு. பரியப் பணம் கட்டுகிற அன்றே திருமணத்திற்குரிய நாளும் குறிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நாளில் பெண்ணை மாப்பிள்ளை விட்டிற்கு அழைத்து வந்து திருமணம் நடத்துவர். பதிக்குரிய தலைவனாகிய "மூப்பன் திருமண நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தி வைக்கிறான். கருப்புப் பாசிகள் அல்லது உலோகத்தால்