பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 32 ஆன சிறிய தகடு, தாலியாக அமைகிறது. தாலிகட்டித் திருமணம் முடிந்தவுடன் வந்திருந்த விருந்தினர்களுக்கு விருந்து படைக்கப்படுகிறது. திருமணத்தின்போது புது மணத் தம்பதிகள் தண்ணீர்த்துறை போதல்’ என்ற சடங்கு நடைபெறுகிறது. மணப்பெண் செம்பு எடுத்துக்கொண்டு மாப்பிள்ளையுடன் ஆற்றுக்குச் சென்று தண்ணீர் எடுத்து வருகின்றாள். இவ்வாறு ஆற்றுக்குச் சென்று நீர் எடுக்கும் பகுதியில் நீர் எடுத்து வருதலைத் தண்ணீர்த் துறை போதல்’ என்று அழைக்கின்றனர். இத்துடன் திருமணம் முடிகிறது. பின் விருந்தினருக்கு விருந்து படைப்பர். விதவைத் திருமணங்களும் நடைபெறுகின்றன. இறந்த வனுடைய உடன் பிறந்தவர்களை இறந்தவனுடைய மனைவி திருமணம் செய்து கொள்ளக்கூடாது. சில பெண் கள் மணவிலக்குச் செய்து கொண்டு வேறு ஒருவனை மணந்து கொள்வதும் உண்டு. பெண் கருவுற்றிருக்கும் காலத்தில் சிற்சில சடங்குகள் செய்கிறார்கள். இருளப்பள்ளர் குழந்தைப் பெற்றவளை வீட்டின் முன்பகுதியில் ஒதுங்கி இருக்கச் செய்வர். மூன்று மாதங்கள் கழித்துத் தீட்டுக் கழித்தபின் தான், தாயை ஏற்றுக்கொண்டு குழந்தையைத் தொட்டிலில் இட்டு வீட்டிற்குள்ளே அழைத்துக்கொள்வர். ஈடிச்சடங்கு பதியில் ஒருவன் இறந்தவுடன் சாவுச் செய்தியை எல்லாருக்கும் அனுப்புவர். உறவினர் அனைவரும் வந்தபின் பிணத்தை எடுப்பர். உறவினர் அனைவரும் வந்தவுடன் சடலத்திற்கு நீராட்டுவர். பின்பு, பாடைகட்டிப் பிணத்தைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வர். அவ்வாறு சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் வழியில் ஒரு சடங்கு செய்வர். அப்பொழுது இறந்தவனுடைய மனைவியின் கருகமணியையும், தலைமுடியையும் பிணத்தின் மீது போடுகிறார்கள். பின்பு, பிணத்தைக் குழியில் வைத்துப் புதைத்ததாகக் கூறப்படுகின்றது. ஓராண்டுக் கழித்துப்