பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. இருளர் திருமணம் ஆர். பெரியாழ்வார் (நீலகிரி மாவட்டத்தில் குன்னுரர் வட்டத்தில் 33 சிற்றுார்களில் 4072 இருளர்கள் வாழ்கிறார் கள். இந்தச் சிற்றுார்கள் கடல் மட்டத்திற்கு 4000 அடிக்கு மேல் உள்ள மலைப் பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் உள்ளன. இவர்களிடம் பலவகையான பழக்க வழக்கங்கள் உள்ளன. சில பழக்க வழக்கங்கள் புதுமையானவை. இருளர் களின் திருமணம் பற்றிய சில செய்திகளை இங்கு விரித்து எழுதியுள்ளேன். -பதிப்பாசிரியர்.] இறார்க்னெஸ் என்பவர் இருளர்கள் திருமணத்தைப் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். 'இருளர்களிடை யில் திருமண ஒப்பந்தம் என்று சொல்லத்தக்க சடங்கு எது வும் காணப்படவில்லை. ஒர் ஆணுடன் சேர்ந்து வாழ்வதோ அவனிடமிருந்து பிரிந்து சென்று விடுவதோ பெண்ணின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். இருளர்களில் வசதிஉள்ள சிலர் ஆணும் பெண்ணும், கணவன், மனைவியாக இணை யும் பொழுது நண்பர்களுக்கும் அண்டை அயலாருக்கும் விருந்து ஒன்று நடத்துவார்கள். அவ்விருந்தின்போது குறும்பர்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் கலந்துகொண்டு அன்று இரவு முழுவதும் ஆடிக்களிப்பார்கள். ஆயினும், இது அரிதாகக் காணப்படும் நிகழ்ச்சியாகும்.’’ இருளர்களிடையே நடைபெறும் திருமணம் மிகவும் எளிமையான ஒரு கிகழ்ச்சி என்று தார்ஸ்டன் குறிப்பிடு கிறார். 'திருமணத்தின் போது செம்மறி ஆடு கொல்லப் பட்டு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படும். திருமணத்தில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள் மணமகனுக்குத் தம்மால்