பக்கம்:மக்களும் மரபுகளும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

薰3给 வைத்து விட்டு வந்து விடுவார்கள். ஒரு மாதத்திற்குப் பின் மாப்பிள்ளையின் தாயும், தந்தையும், மற்றும் ஐந்து உறவினர்களும் பெண் வீட்டிற்கு ஏழு குச்சிகளுடன் செல் வார்கள். பெண்ணின் பெற்றோர்கள் பெண் கொடுக்கச் சம்மதித்தால் வந்தவர்களுக்கு ஒரு விருந்து கொடுப்பார்கள். பெண் கேட்கச் சென்றவர்கள் ஏழு குச்சிகளுடன் திரும்பு வார்கள். மாப்பிள்ளை வீட்டிலிருந்து சில நாள்கள் கழித்து ஆண்கள் பெண்கள் கொண்ட குழுக்கள் இசைக்குழுவோடு சென்று பெண்ணின் தாய், தந்தைக்கு அணிகலன்கள் இருபத் தைந்து ரூபாய் ஆகியவற்றைக் கொடுப்பார்கள். பெண் னைப் புதுத் துணிகளை உடுத்தச் செய்து இசைக்குழு புடை சூழ அவளை ஊர்வலமாகத் தாய்மாமன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். பெண்ணையும், மாப்பிள்ளை யையும், நிறுத்தி அவர்களுக்கிடையே ஒரு திரையிடுவர். மாப்பிள்ளை தாவியை ஒரு முதியவரிடம் கொடுக்கிறான். முதியவர் அதைத் தன் மனைவியிடம் கொடுக்க அவள் பெண்னுக்குத் தாலி கட்டுகிறாள். பண்டைக் காலத்தில் பாசியோ, மஞ்சள் கயிறோ தாலியாகப் பயன்படுத்தப் பட்டது. இப்போது உலோகத்தால் செய்யப்பட்ட தாலியை பயன்படுத்துகிறார்கள். திருமணம் ஆனவுடன் மணமகள் தன் கணவன் வீட்டில் அவனுடைய தாய், தந்தையருடன் சேர்த்து வாழ்வாள். சில சமயங்களில் கணவனும் மனைவி யும் சேர்ந்து தனியாக வாழ்வார்கள். இருளர்களிடையே காணப்படும் வேறு சில உட்பிரிவின கிடையே இன்னொரு திருமண முறையும் வழக்கில் காணப் படுகிறது. இம் முறைப்படி பூப்பெய்திய பெண் திருமணத் துக்கு முன் தன்னை மணக்கவிருப்பவன் வீட்டிற்குச் சென்று அவனுடன் ஒராண்டு வரை வாழ்க்கை நடத்துவாள். மாப்பிள்ளை வசதிக்கேற்பப் பணம் சேர்த்தவுடன் திருமணம் நடைபெறுகிறது. இப்படி இருவரும் வாழும் பொழுது அவள் பிள்ளை பெறும் நிலை அடைந்து விட்டால் உடனே திருமணம் நடைபெறும். பெரும்பாலும் தாய் தந்தையரே திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார்கள்.